பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள்
செப்டம்பர் 24, 2019 பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, இந்திய ரிசர்வ் வங்கி (செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட உத்தரவின்படி), பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிராவை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்துள்ளது. உத்தரவுகளின்படி வைப்புதாரர்கள் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ரூ 1,000 த்துக்கு மிகாத தொகையை(ரூபாய் ஆயிரம் மட்டும்) மேலே குறிப்பிட்ட ஆர் பி ஐ யின் வழிகாட்டு உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு உட்பட்டு, எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படலாம். செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட உத்தரவின்படி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஆர் பி ஐ யின் உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடியன்றி கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ,புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, ஏதேனும் பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் ஏதேனும் மற்றும் இங்கு வழங்கப்பட்ட விதம் தவிர அல்லது அவை சார்ந்த விவகாரங்களில் ஈடுபடுதல் கூடாது. செப்டம்பர் 23, 2019 அன்று வங்கியின் வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து ஆறு மாத காலத்திற்கு இந்த உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும். ஆர் பி ஐ யின் இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டதால் ஆர் பி ஐ யின் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. நிதி நிலை மேம்படும் வரை வங்கி கட்டுபாடுகளுடன் வங்கி வர்த்தகத்தை தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களை ஆர் பி ஐ பரிசீலிக்கலாம். 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35A ன் துணைபிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் ஆர்வமுள்ள பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/766 |