வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், புனே, மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், புனே, மகாராஷ்டிரா
தேதி: பிப்ரவரி 27, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ருபி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பிப்ரவரி 22, 2013 தேதி வர்த்தக முடிவுற்றதிலிருந்து பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட உத்தரவுகளின் படி வழிகாட்டுதலின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடியாகும் காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு நவம்பர் 27, 2018 தேதியிட்ட உத்தரவு, அதன் செல்லுபடியாகும் தன்மை மதிப்பாய்வுக்கு உட்பட்டு பிப்ரவரி 28, 2019 வரை நீட்டிக்கப்படும். இதனால் பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கப்படுவது யாதெனில் 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் இணைந்த பிரிவு 56 உடன் உள்ள பொருளின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி. பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட உத்தரவானது, அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக பிப்ரவரி 28, 2019 வரை நீட்டிக்கப்பட்ட அதன் செல்லுபடியாகும் தன்மை, பிப்ரவரி 26, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு மார்ச் 01, 2019 முதல் மே 31, 2019 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து நீட்டிக்கப்படும். உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் பிப்ரவரி 26, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/2047 |