RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78530765

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – சன்மித்ரா சஹகாரி வங்கி மர்யாதித், மும்பாய், மஹாராஷ்டிரா

மார்ச் 14, 2018

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
சன்மித்ரா சஹகாரி வங்கி மர்யாதித், மும்பாய், மஹாராஷ்டிரா

இந்திய ரிசர்வ் வங்கி, சன்மித்ரா சஹகாரி வங்கி மர்யாதித், மும்பாய், மஹாராஷ்டிரா வங்கிக்கு, ஜுன் 14, 2016 தேதியில் வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில் அளித்த உத்தரவில் 6 மாதங்களுக்கு வழிகாட்டுதல் உத்தரவிடப்பட்டது. அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, (உடன் அடுத்த கட்டளைகளைப் படிக்கவும்) கடைசியாக மார்ச் 14, 2018 தேதியிட்ட வழிகாட்டுதலின்படி மறுஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட சன்மித்ரா சஹகாரி வங்கி மர்யாதித், மும்பாய் வங்கிக்கு, பொதுமக்கள்நலன் கருதி, இது அவசியம் என்பதில் திருப்தி அடைந்து, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜுன் 14, 2016 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவினை அவ்வப்போது மாற்றங்கள் செய்து, செப்டம்பர் 08, 2017 தேதியிட்ட உத்தரவின்படி, மார்ச் 14, 2018 வரை செயல்பாட்டு கால அளவை நீட்டித்து உத்தரவை வெளியிட்டது. ரிசர்வ் வங்கி, மார்ச் 09, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, மார்ச் 15, 2018 முதல் ஜூலை 14, 2018 வரை மேலும் நான்கு மாத காலத்திற்கு மறுஆய்விற்கு உட்பட்டு நீட்டித்து வங்கியை கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது.

அவ்வப்போது திருத்தப்பட்ட இந்த உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் தொடர்ந்து இருக்கும்.

மார்ச் 09, 2009 தேதியிடப்பட்ட உத்தரவின் நகலை பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் நிதிநிலைமையில் முன்னேற்றம் கொண்டுவிட்டதாகக் கருதாது.

(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2446

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?