RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78508053

சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா நிறுவனத்திற்கு வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கால நீட்டிப்பு

அக்டோபர் 03, 2020

சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா நிறுவனத்திற்கு
வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கால நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D14/12.22.254/2018-19 வழிகாட்டு உத்தரவின்படி, சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ராவை மே 04, 2019 வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத களத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்தது. கடைசியாக ஜூலை 31, 2020 தேதியிட்ட DOR.CO.AID./No. D-10/12.22.254/2020-21 வழிகாட்டுதல் உத்தரவின் படி அக்டோபர் 04, 2020 வரை நீட்டிக்கபட்டிருந்தது.

2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா வங்கிக்கு வழங்கிய மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D14/12.22.254/2018-19 உத்தரவின் செல்லுபடி காலத்தை அவ்வபோது மாற்றியமைத்து, கடைசியாக அக்டோபர் 04, 2020 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30, 2020 DOR.CO.AID./No.D-24/12.22.254/2020-21 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு அக்டோபர் 05, 2020 முதல் டிசம்பர் 04, 2020 வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.

3. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் செப்டம்பர் 30, 2020 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.

(யோகேஷ் தயால்)      
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு : 2020-2021/430

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?