RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78508107

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பிரிவு 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – ஸ்ரீ கணேஷ் சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா – கால அளவு நீட்டிப்பு

அக்டோபர் 03, 2017

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பிரிவு 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
ஸ்ரீ கணேஷ் சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா –
கால அளவு நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ கணேஷ் சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா வங்கிக்கு, ஏப்ரல் 01, 2013 தேதியிட்ட உத்தரவின்படி ஏப்ரல் 02, 2013 அன்று வர்த்தகம் முடிந்த நேரத்திலிருந்து கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு கால அளவு நீட்டிக்கப்பட்டு, கடைசியாக மார்ச் 24, 2017 முதல் செப்டம்பர் 29, 2017 வரை கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா மும்பையிலுள்ள வங்கிக்கு, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் (பிரிவு 56 உடன் சேர்த்துப் படிக்க) பிரிவு 35A-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் 01, 2013ல் மேற்கூறப்பட்டுள்ள வங்கிக்கு வழிகாட்டுதல் உத்தரவுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு கால அளவு நீட்டிக்கப்பட்டு, கடைசியாக செப்டம்பர் 29, 2017 வரை கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இது மறு ஆய்வுக்குட்பட்டு செப்டம்பர் 25, 2017ல் வெளியிட்ட உத்தரவுப்படி, செப்டம்பர் 30, 2017 முதல் மார்ச் 29, 2018 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

செப்டம்பர் 25, 2017ல் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.

இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் காலஅளவை நீட்டித்ததை மட்டுமே கருத்தில்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் நிதிநிலை கணிசமாக மேம்பாட்டு விட்டதாக திருப்தியடைந்துவிட்டதெனக் கருதக்கூடாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிகை வெளியீடு – 2017-2018/910

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?