வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – தி C.K.P. கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா
நவம்பர் 29, 2017 வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் தி C.K.P. கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா வங்கிக்கு, ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவின்படி, வழிகாட்டுதல்கள் உத்தரவின் கீழ் வைக்க மே 02, 2014 அன்று வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, அடுத்தடுத்த கட்டளைகளின்படி கடைசியாக ஜூலை 26, 2017 தேதியிட்ட உத்தரவின்படி, நவம்பர் 30, 2017 வரை மறுஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்கள்நலன் கருதி, இவ்வங்கிக்கு, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஏப்ரல் 30, 2014தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவினை அவ்வப்போது மாற்றங்கள் செய்து, கடைசியாக நவம்பர் 30, 2017 வரை நீட்டித்த கால அளவை, மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து டிசம்பர் 01, 2017 முதல் மார்ச் 31, 2018 வரை நவம்பர் 23, 2017 தேதியிட்ட உத்தரவின்படி மறுஆய்விற்கு உட்பட்டு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 23, 2017 தேதியிடப்பட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள், மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் நிதிநிலைமையில் முன்னேற்றம் கொண்டுவிட்டதாகக் கருதாது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1476 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: