RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78504415

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – தி கபோல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா

மார்ச் 31, 2018

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
தி கபோல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா

தி கபோல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மஹாராஷ்டிரா வங்கிக்கு, மார்ச் 30, 2017 தேதியிட்ட உத்தரவின்படி, ஆறு மாதங்களுக்கு வழிகாட்டுதல்கள் உத்தரவின்கீழ் வைக்க மார்ச் 30, 2017 அன்று வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில் உத்தரவிடப்பட்டது. அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, உடன் அடுத்த கட்டளைகளின்படி கடைசியாக செப்டம்பர் 25, 2017 தேதியிட்ட உத்தரவின்படி, மார்ச் 31, 2018 வரை மறுஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்கள்நலன் கருதி, தி கபோல் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை வங்கிக்கு, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 30, 2017 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவினை அவ்வப்போது மாற்றங்கள் செய்து, செப்டம்பர் 25, 2017 தேதியிட்ட உத்தரவின்படி, மார்ச் 31, 2018 செயல்பாட்டு கால அளவை நீட்டித்து உத்தரவை வெளியிட்டது. இது மார்ச் 20, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, மேலும் நான்கு மாதங்களுக்கு ஏப்ரல் 01, 2018 முதல் ஜூலை 31, 2018 வரை மறுஆய்விற்கு உட்பட்டு நீட்டித்துள்ளது.

வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும்.

மார்ச் 20, 2018 தேதியிடப்பட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் நிதிநிலைமையில் முன்னேற்றம் கொண்டுவிட்டதாகக் கருதாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2595

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?