RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78520227

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- கால நீட்டிப்பு

ஜூலை 31, 2019

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிகாட்டுதல்கள் - கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை,
மகாராஷ்டிரா- கால நீட்டிப்பு

மார்ச் 30, 2017 தேதியிட்ட உத்தரவின்வின்படி மார்ச் 30, 2017 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. மேற்கண்ட உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு ஜனவரி 24, 2019 உத்தரவின்படி ஜூலை 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டது.

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின்(கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும், பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் பொருளின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவலுக்காக இது அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட மார்ச் 30, 2017 தேதியிட்ட உத்தரவு, அதன் செல்லுபடியாகும் தன்மை ஜனவரி 24, 2019 தேதியிட்ட நீட்டிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலும் ஆறு மாத காலத்திற்கு வங்கிக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஆகஸ்ட் 01, 2019 முதல் ஜனவரி 31, 2020 வரை நீட்டிக்கப்படுகின்றது.

உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.

மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் ஜூலை 23, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் குறிப்பிட்ட முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/300

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?