RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78495271

வங்கியில் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள உத்தரவுகள் – யு.பி சிவில் செகரெடிரியட் முதன்மை கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னோ

செப்டம்பர் 26, 2018

வங்கியில் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
உத்தரவுகள் – யு.பி சிவில் செகரெடிரியட் முதன்மை கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னோ

லக்னோவின் யு. பி. சிவில் செகரெடிரியட் முதன்மை கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு பொது மக்களின் நலனுக்காக சில உத்தரவுகளை வழங்க வேண்டியது அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி எண்ணி உத்தரவிடுகிறது. அதன் படி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்ககளுக்கு பொருந்தும் வகையில்) செப்டம்பர் 25, 2018 லிருந்து பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் பிரிவு 56 உடன் இந்திய ரிசர்வ் வங்கி லக்னோவில் உள்ள உ. பி. சிவில் செகரெடிரியட் முதன்மை கூட்டுறவு வங்கி லிமிடெட் வர்த்தகம் முடிவுற்றதில் இருந்து, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக முன் அனுமதியின்றி, கடன்கள் அல்லது முன்பணம் வழங்குதல் அல்லது அவற்றைப் புதுப்பித்துல், முதலீடு செய்தல், பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுதல் அதாவது பணகடன் வாங்குதல், புதிய வைப்புத் தொகைகளை ஏற்றுக் கொள்வது உட்பட, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகப் பணம் வழங்குதல், அல்லது வழங்கிட ஒப்பந்தம் செய்து கொள்ளுதல், பரஸ்பர உடன்படிக்கைகள் மேலும் அதன் சொத்துக்களை, விற்றல் மாற்றுதல் பரிமாற்றங்களை கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொடுக்கப்பட்ட அளவில் மட்டுமே மேற் கொள்ள முடியும்.

  1. ஒவ்வொரு சேமிப்பு வங்கி அல்லது நடப்புக்கணக்கு அல்லது வேறு எந்த வைப்புத்தொகை கணக்கில் உள்ள மொத்தத் தொகையிலிருந்து, ஒரு வைப்பாளாராக ரூ. 1,000- த்திற்குள்ளாக திரும்பப் பெற வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படலாம். எங்கெல்லாம் அந்த வைப்புதாரர் வங்கிக்குப் பணம் தர வேண்டியுள்ளதோ (கடனாளி / கடனுறுதியாளர் என்ற முறையில்) அந்தத் தொகையை முதலில் கழித்துக் கொண்ட பின்னரே, வைப்புதாரருக்குப் பணம் வழங்கப்பட வேண்டும்.

  2. தற்போதுள்ள குறித்த கால வைப்புத் தொகையினை, அதே பெயர், அதே திறன் / நிலையில் புதுப்பித்தல்.

  3. மேற் குறிப்பிட்ட உத்தரவுகளில் அனுமதிக்கப்பட்ட செலவினங்கள்.

  4. அரசு / சட்டப்பூர்வ நீர்மத் தன்மை இருப்பிற்காக (SLR) அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியால் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டாலன்றி, வங்கி எந்தவொரு கடனையும் ஏற்கவோ அல்லது திருப்பி செலுத்தவோ கூடாது.

இந்தக் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் விளக்கங்கள், பொது மக்கள் பயன்பாட்டிற்காக அறிவிப்புப் பலகையில் பார்வையிடும் வண்ணம் வங்கியின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக் கூடாது. இந்த வங்கி தனது வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட உத்தரவுகளின் படி மேற்கொள்ளும்.

இந்த அறிவுறுத்தல்கள் அவ்வப்போது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, செப்டம்பர் 25, 2018 அன்று வேலை நேர முடிவிலிருந்து 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு:2018-2018/712

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?