RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78528395

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – மாராத்தா சாஹாகரி வங்கி லிமிடெட்., மும்பை, மாகாராஷ்டிரா – கால நீட்டிப்பு

ஜூன் 30, 2021

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன்
இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – மாராத்தா
சாஹாகரி வங்கி லிமிடெட்., மும்பை, மாகாராஷ்டிரா – கால நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 15, 2020 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-4/12.22.141/2016-17 உத்தரவின் படி மாராத்தா சாஹாகரி வங்கி லிமிடெட், மும்பை (மகாராஷ்டிரா) வங்கியை ஆகஸ்ட் 31, 2016 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்திரவுகளின் கீழ் வைத்தது. மேலும் இவ்வுத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்பபோது நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜூன் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டது.

2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கூறிய வழிகாட்டுதல் உத்தரவு ஜூன் 29, 2021 தேதியிட்ட DOR.MON/D-21/12.22.140/2021-22, உத்தரவின் படி மறு ஆய்வுக்கு உட்பட்டு செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பொதுமக்களின் தகவல்களுக்கு அறிவிக்கிறது.

3. பார்வையில் கண்ட உத்தரவின் மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் ஜூன்29, 2021 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.

(யோகேஷ் தயால்)    
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2021-2022/460

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?