1949 ஆம் ஆண்டு வங்கி யியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சிகார் அர்பன் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், சிகார் (ராஜஸ்தான்) - செல்லுபடியாகும் கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கி யியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சிகார் அர்பன் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், சிகார் (ராஜஸ்தான்) - செல்லுபடியாகும் கால நீட்டிப்பு
மே 10, 2019 1949 ஆம் ஆண்டு வங்கி யியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த சிகார் அர்பன் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், சிகார் (ராஜஸ்தான்), நவம்பர் 6, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்ற நாளிலிருந்து மேலும் ஆறு மாத காலத்திற்கு, அக்டோபர் 26, 2018 தேதியிட்ட உத்தரவின் செயல்பாட்டு காலத்தை நீட்டிக்க வேண்டியது பொது நலனில் அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கருதுகிறது என்பது பொதுமக்களின் தகவலுக்கு அறிவிக்கப்படுகிறது. அதன்படி, சிகார் அர்பன் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், சிகார் (ராஜஸ்தான்),1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரங்களை பயன்படுத்தி, அக்டோபர் 26, 2018 தேதியிட்டு வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மே 02, 2019 வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு மே 10, 2019 முதல் நவம்பர் 09, 2019 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து நீட்டிக்கப்படும். மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின் கீழ் உள்ள உத்தரவுகளின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட வழிமுறைகளின் உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, வங்கியின் வங்கி உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த வழிகாட்டுதல்களின் மாற்றங்களை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம். ஷைலஜா சிங் செய்தி வெளியீடு: 2018-2019/2647 |