வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A உடன் இணைந்த பிரிவு 56 இன் பொருளின் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - கோவாவின் மாபுசா கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி, கோவா - வழிகாட்டுதல்களின் காலத்தை நீட்டித்தல் மற்றும் திரும்பப் பெறுதல் வரம்பில் தளர்வு - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A உடன் இணைந்த பிரிவு 56 இன் பொருளின் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - கோவாவின் மாபுசா கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி, கோவா - வழிகாட்டுதல்களின் காலத்தை நீட்டித்தல் மற்றும் திரும்பப் பெறுதல் வரம்பில் தளர்வு
தேதி: பிப்ரவரி 20, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A உடன் இணைந்த பிரிவு 56 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35A இன் கீழ் கோவாவின் மாபுசா கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், கோவாவிற்கு ஜூலை 24 ஆம் தேதி தேதியிட்ட வழிகாட்டுதல்களின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வெளியிட்டது. இவ்வுத்தரவானது அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு கடைசியாக ஆகஸ்ட் 13, 2018 தேதியிட்டவழிகாட்டுதல்களின் மூலம் மாற்றப்பட்டு, இது கடைசியாக பிப்ரவரி 18, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வழிகாட்டுதல்களைப் பொறுத்தவரை, பிற நிபந்தனைகளின் படி, ஒவ்வொரு சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையின் ரூ. 1,000/- ஐத் தாண்டாத தொகை எந்தவொரு பெயரிலும், ஒரு வைப்புத்தொகையாளரால் திரும்பப் பெற அனுமதிக்கப்படலாம். அத்தகைய வைப்புத்தொகையாளர் எந்த வகையில் வங்கிக்கு பொறுப்பேற்கிறாரோ, அதாவது கடன் வாங்குபவர் அல்லது ஜாமீன், வங்கி வைப்புகளுக்கு எதிரான கடன்கள் உட்பட, சம்பந்தப்பட்ட கடன் கணக்கில்/தொகைக்கு முதலில் தொகை சரிசெய்யப்படலாம். இந்திய ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் நிதி நிலையை மறுஆய்வு செய்துள்ளதுடன், வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 56.உடன் இணைந்த 35A பிரிவின் துணைப்பிரிவுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கூறிய வழிகாட்டுதல்களை மாற்றியமைப்பது பொது நலனில் அவசியம் என்று கருதுகிறது. ரிசர்வ் வங்கி, ஜூலை 24, 2015 தேதியிட்ட அதன் உத்தரவைகளை மாற்றியுள்ளது. ஒவ்வொரு சேமிப்பு வங்கி கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது கால வைப்பு கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் (எந்த பெயரிலும்) ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) மிகாத தொகை; அத்தகைய வைப்புத்தொகையாளர் எந்த வகையிலும் வங்கியில் பாக்கி வைத்திருந்தால், அதாவது கடன் வாங்குபவர் அல்லது ஜாமீன், வங்கி வைப்புகளுக்கு எதிரான கடன்கள் உட்பட, அந்த தொகை முதலில் சம்பந்தப்பட்ட கடன் கணக்கில் சரிசெய்யப்பட்டு, வைப்புத்தொகையாளரால் திரும்பப் பெற அனுமதிக்கப்படலாம். வைப்புத்தொகையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை வங்கியால் தனித்தனியாக ஒரு எஸ்க்ரோ (escrow)கணக்கில் மற்றும்/அல்லது ஒதுக்கப்பட்ட பத்திரங்களில் வைக்கப்பட வேண்டும், அவை திருத்தப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளின்படி வைப்புத்தொகையாளர்களுக்கு திருப்பித்தர மட்டுமே வங்கியால் பயன்படுத்தப்படும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி பொது நலனில் திருப்தி அடைந்து, கோவாவின் மாபூசா கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், கோவா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஜூலை 24, 2015 தேதியிட்ட உத்தரவின் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட செயல்பாட்டு காலத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று கருதியது.. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தி கோவாவின் மாபூசா கோ ஆபரேடிவ் அர்பன் வங்கி, கோவா வழங்கப்பட்ட ஜூலை 24, 2015 தேதியிட்ட அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின் செல்லுபடியாகும் தன்மை கடைசியாக பிப்ரவரி 18, 2019 வரை நீட்டிக்கப்பட்டது, பிப்ரவரி 19, 2019 முதல் ஆகஸ்ட் 18, 2019 வரை மீண்டும் மதிப்பாய்வுக்கு உட்பட்டு மேலும் ஆறு மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து நீட்டிக்கப்படும். அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/1979 |