வர்த்தகக் கடனுக்கான பொறுப்பேற்கும் கடிதம் (LoUs) மற்றும் திரும்பச் செலுத்துகைக்கான (LoCs) கால அவகாசப் பத்திரங்கள் நிறுத்துதல்
RBI/2017-18/139 மார்ச் 13, 2018 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் பிரிவு – 1 வங்கிகள் அன்புடையீர் வர்த்தகக் கடனுக்கான பொறுப்பேற்கும் கடிதம் (LoUs) மற்றும் திரும்பச் அங்கீகாரம் பெற்ற வர்த்தகர் பிரிவு – 1 வங்கிகள், நவம்பர் 01, 2004 தேதியிட்ட A. P. (DIR வரிசை) சுற்றறிக்கையின் இரண்டாம் பாகம் மற்றும் ஜனவரி 01, 2016 தேதியிட்ட முதன்மை வழிகாட்டுதல்களின் பத்தி 5.5-ஐப் பார்க்கவும். வெளிநாட்டு வணிகக் கடன்கள் வணிகக் கடன் அந்நியச் செலாவணி அங்கீகாரம் பெற்ற வங்கிகளைத் தவிர, அந்நியச் செலாவணியினால் கடன் வாங்குதல் மற்றும் கடனளித்தலுக்கான அங்கீகாரம் பெற்ற வணிகர்கள், AD வங்கிகளின் பிரதிநிதித்துவம் பெற்ற அதிகாரங்களின் கீழ் இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான கடனுதவி / கடனளிப்பு / திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசப் பத்திரம் முதலியவை அவ்வப்போது திருத்தியமைக்கப்படுகிறது. 2. ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதன் மூலம், AD வகை வங்கிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கான வர்த்தகக் கடனிற்கான LoUs, LoCs வழங்குவதை நடைமுறைப்படுத்துவதை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது. அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்ட ஜூலை 01, 2015 தேதியிட்ட வங்கி ஒழுங்குமுறை முதன்மைச்(மாஸ்டர்) சுற்றறிக்கை எண் DBR. No. Dir. BC 11 / 13.03.00 / 2015-16-ல் உள்ள விதிகளின்படி இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கான வர்த்தக கடன்களுக்கான கடன் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் தொடரப்படலாம். 3. AD வகை – 1 வங்கிகள் இந்த சுற்றறிக்கையின் உள்ளடக்கங்களை அவற்றின் அங்கத்தினர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கலாம். 4. ஜனவரி 04, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட முதன்மை வழிகாட்டல்கள் எண் 5-ன் உள்ளடக்கங்கள் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்படும். இந்த சுற்றறிக்கையின் தேதியிலிருந்து மாற்றங்கள் பொருந்தும். 5. சுற்றறிக்கையில் உள்ள வழிகாட்டல்கள் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 (1999-ன் 42)-ன் 10(4) மற்றும் 11 (1)-ன் கீழ் வெளியிடப்பட்டது. மற்றும் இது வேறு எந்தச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் அனுமதிகள் / ஒப்புதல்கள் ஆகியவற்றிற்கு பாரபட்சம் இல்லாதது. இங்ஙனம் (அஜய் குமார் மிஸ்ரா) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: