குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை மாற்றுவதற்கான முகப்புகள் தொடரப்படாது - ஆர்பிஐ - Reserve Bank of India
குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை மாற்றுவதற்கான முகப்புகள் தொடரப்படாது
அறிவிப்பு எண் 155 நவம்பர் 24, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை மாற்றுவதற்கான முகப்புகள் தொடரப்படாது “ரூ.500 மற்றும் ரூ.1000 வங்கி நோட்டுகளின் சட்டபடி செல்லுபடியாகும் தன்மையைத் திரும்ப்ப் பெறுவது – முகப்புகளின் ஊடே மாற்றுவது“ தொடர்பான எங்களது சுற்றறிக்கை எண் DCM (Plg) 1302/10.27.00/2016-17 நவம்பர் 17, 2016 தேதியிட்டதைப் பார்க்கவும். 2. நவம்பர் 24, 2016-ம் தேதிக்குப் பிறகு, குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை முகப்பின் ஊடே (பணமாக) மாற்றிக் கொள்ளும் முறையை, நவம்பர் 24, 2016-ம் தேதி நள்ளிரவிலிருந்து நிறுத்துவது என மறுபரிசீலனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி நோட்டுக்களை வங்கிகளில் முகப்பின் ஊடே மாற்றவரும் பொதுமக்களை, அவர்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திடுமாறு ஊக்குவிக்கவேண்டும். 3. வங்கி வசதி இல்லாத மக்களுக்குப் புதிய கணக்குகள் தொடங்கிட வங்கிகள் ஏற்பாடுகள் செய்திட வேண்டும். இங்ஙனம் (P.விஜய குமார்) |