RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78495242

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், நாக்பூர் மீது - அபராதம் விதிக்கப்பட்டது

செப்டம்பர் 26, 2018

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், நாக்பூர் மீது -
அபராதம் விதிக்கப்பட்டது

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்),இன் பிரிவு 47 A (1) ன் விதிகளின் கீழ் இணைந்த பிரிவு 46 (4) உடன் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், நாக்பூருக்கு இந்திய ரிசர்வ் வங்கி 3.00 லட்சம் (ரூபாய் மூன்று லட்சம் மட்டும்) BR சட்டம் (AACS) (பிரிவு 20) இன் 'எந்தவொரு இயக்குநருக்கும் எந்தவொரு கடனோ அல்லது முன்பணமோ வழங்குவதை தடைசெய்தல்' விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கி வழங்கிய, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள்/ வழிகாட்டுதல்களான செயல்பாட்டு வழிமுறைகளை மீறியதற்காகவும், KYC / AML வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காகவும், மைக்ரேஷன் தணிக்கை நடத்தாதது மற்றும் ஆய்வு அறிக்கை 2017 க்கு திருப்திகரமான பதிலறிக்கை சமர்ப்பிக்காதது ஆகியவற்றிற்காக அபராதம் விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி,வங்கிக்கு இரண்டு விளக்கம் கேட்கும் அறிவிப்புகளை வெளியிட்டது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி ஒரு விளக்கம் கேட்கும் அறிவிப்புக்கு மட்டுமே எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. வழக்கின் உண்மைகளையும், இந்த விவகாரத்தில் வங்கியின் பதிலையும் பரிசீலித்த பின்னர், விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டது என கருதி அபராதம் விதிக்க வேண்டியது அவசியம் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு: 2018-2019/710

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?