துர்கா கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிட்., விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் - அபராதம் விதிக்கப்படுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
துர்கா கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிட்., விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் - அபராதம் விதிக்கப்படுகிறது
செப்டம்பர் 22, 2017 துர்கா கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிட்., விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் இந்திய ரிசர்வ் வங்கி, துர்கா கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிட்., விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் மீது ரூ. 5.00 லட்சம் அபராதம் விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்), சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வங்கி இயக்குநர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்குக் கடன்களை வழங்குவதில் வரம்பு ஆகியவை குறித்த ஆணைகள் / வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட வங்கி பின்பற்றாத காரணத்தால் மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/814 |