RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78439604

தனிநபர் அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள் எளிமையாக்கம்: தாராபூர் குழுவின் பரிந்துறைகளை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப் படுத்துகிறது

மே 25, 2004

இந்திய ரிசர்வ் வங்கி, தனிநபர்களின் அந்நியச் செலாவணிப் பரிமாற்றங்கள், அவர்களது பணப்பறிமாற்றங்கள் போன்று எளிமையாக அமைய, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றுள் தாராளமாக்கப்பட்ட திட்டமும் அடங்கும். அதன்படி அமெரிக்க டாலர் 25000 வரை தனிப்பட்ட நபர் தொகை செலுத்தலாம் என்பது பிப்ரவரி 2004ல் அறிவிக்கப்பட்டது. அத்தோடு சலுகை வீதத்தில் பணியாளரது பங்கு விருப்பு எனும் வரையறைப் பிரிவும் நீக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி அயல்நாட்டு செலாவணி சட்டம் 1999 என்பதனை நடைமுறைப் படுத்திவந்த துறையின் பெயரையும் செலாவணி கட்டுப்பட்டுத் துறை என்பதற்குப் பதிலாக அந்நியச் செலாவணித்துறை என மாற்றி அமைத்தது. அத்தோடு அதனைக் குறிக்கோள் நிறைவேற்றும் மிக்க சிறப்புக் கடமைப்பிரிவாக, சேவை மனப்பான்மையுடையதாக மாற்றி அமைத்தது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கி பயிற்சி பெற்ற அலுவலர்களை வாடிக்கையாளர்களை நேருக்குநேர் சந்திக்கும் முதற்கட்ட நிலையில் வங்கிகள் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட வணிகக்கிளைகளில் பணி அமர்த்தவேண்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

நவம்பர் 2003ல் ஏற்றுக் கொண்ட இடைப் பருவ பணம்சார் கடன் கொள்கையைச் செயல்பாட்டைப் பின்பற்றி இந்திய ரிசர்வ் வங்கி பொதுச் சேவையின் நடைமுறை மற்றும் செயற்பாங்கு குறித்த தணிக்கைக் குழு ஒன்றினை (தலைவர் எஸ்.எஸ்.தாராபூர் முன்னாள் துணை ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி) நிறுவியது. தனி நபர் வாடிக்கையாளர் பரிமாற்றச் செயல்பாடுகளில் நான்கு வேறுபட்ட பகுதிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் நடைமுறை மற்றும் செயற்பாங்கின் அடிப்படையில் தாராபூர் குழு ஆய்ந்தறிந்தது. அயல்நாட்டுச் செலாவணி, அரசாங்கப் பரிமாற்றங்கள், வங்கி இயக்கமுறை, நாணயமேலாண்மை என அப்பகுதிகள் அமைந்தன. தாராபூர் குழு அதன் அறிக்கையை ஜனவரி-ஏப்ரல் 2004ல் அளித்தது. இந்திய ரிசர்வ் வங்கி அதன் பரிந்துறைகளைக் கவனமாகப்பார்த்து, அதனடிப்படையில், ஒவ்வொரு பகுதியிலும் அதைச் செயல்முறைப்படுத்த நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தது.

இந்திய ரிசர்வ் வங்கி இக்குழுவின் பரிந்துறைகளை இதர வங்கிகளுக்கு அனுப்பிவைத்தது. அவர்களது உள்ளமைப்பு பொதுச்சேவையின் நடைமுறை, மற்றும் செயற்பாங்கு குறித்த தணிக்கை, தற்காலிகத் தனிக்குழுக்களிடம் பின்தொடர் நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, இத்தற்காலிகத் தனிக் குழுக்கள், குறிப்பாக தனிநபர்களின் பரிமாற்றம் தொடர்பான அம்சங்களில் இப்பகுதிகளில் செயல்முறைகளையும் நடைமுறையையும் எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுமேனக் கேட்டுக் கொண்டது. வங்கி அளவிலான தற்காலிகத் தனிக்குழுக்கள் இது தொடர்பாக முதல் கூட்டத்தில் நேருக்குநேர் வாடிக்கையாளர்களோடு தொடர்புகொள்வதற்கு பயிற்சி பெற்ற விபரமான பணியாளர்க்களைப் பணியமர்த்துவதை உறுதி செய்யவேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

அல்பனா கிள்ளாவாலா

தலைமை பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு 2003-2004/1377

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?