மின்னணுதீர்வு சேவை (ECS)
RBI/2005-06/181
Ref. DPSS(CO)No.590/01.01.15/2005
அக்டோபர் 17, 2005
மின்னணுதீர்வு
சேவையில்
பங்கேற்கும்
அனைத்து
வங்கிகளின்
தலைவர்கள்
மற்றும்
தலைமை செயல்
அலுவலர்களுக்கும்,
அன்புடையீர்,
மின்னணுதீர்வு சேவை (ECS)
நீங்கள் அனைவரும் மின்னணுதீர்வு சேவை (ECS) அரசுத்துறை நிறுவன அமைப்புகள் மற்றும் இதர வகைகளில் உள்ள பல்வேறு உபயோகிப்பாளர்களால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்பதனை அறிவீர்கள். சம்பளம், ஓய்வூதியம், ஈவுத்தொகை, வட்டி மற்றும் இதர வகை தொடர்ந்த பணம் செலுத்தும் முறைகளுக்கு பயன்படுகிறது.
2. இ.சி.எஸ். பிரயோகிப்பவர் மற்றும் பயனடையும் வாடிக்கையாளர் என்று இருதரப்பாளருக்கும் வசதி உள்ளதாக நிரூபிக்கப் பட்டிருந்தாலும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய புகார் என்னவென்றால் இ.சி.எஸ் பதிவுகளின் விவரங்கள் பற்றுவரவுக் கணக்கேட்டிலும்/ கணக்குகளைப் பற்றிய அறிக்கையிலும் முழுமையாக இல்லாததால், வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளை பொருத்துவித்தல் மிக கடினமாகிறது. பொதுநல சேவைக்கான செயல்முறை மற்றும் செயல் நிறைவேற்ற ஆய்வுக்குழு (CPPAPS) (தாராப்பூர் குழு) பரிவர்த்தனைகளின் முழு விவரங்கள் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
3. இ.சி.எஸ். அறிக்கையில (காகிதம் மற்றும் மின்னணு முறையில்) உபயோகிப்பாளரின் பெயர் ஒரு சிறு சுருக்கக் குறியீடாக வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது கணக்குகளின் அறிக்கையில் விவரங்களை அளித்திட வசதியை ஏற்படுத்துகிறது. இந்த சுருக்கக் குறியீடு சரியான முறையில் வசப்படுத்தப்பட்டு உபயோகப்படுத்தப் படலாம்.
4. மேற்கண்டவைகளின் காரணமாக உங்கள் கிளை அலுவலகங்களுக்கு தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து, வாடிக்கையாளரின் பற்றுவரவுக் கணக்கேட்டிலும்/ கணக்குகளைப் பற்றிய அறிக்கைகளிலும் இ.சி.எஸ். மூலம் பதிவான வரவுகளைப் பற்றிய முழு விவரங்களை அளிக்கச் செய்யுங்கள். மேற்கண்டவைகளை எளிமையாக்கிட தகுந்த தொழில்நுட்ப வழிகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
5. இதே போன்ற அணுகுமுறையை மின்னணு நிதிமாற்றம் (EFT) சிறப்பு மின்னணு நிதிமாற்றம் (SEFT) உடனுக்குடன் செய்யப்படும் மொத்தத்தீர்வு (RTGS) போன்ற அனுப்புபவர் மற்றும் அனுப்புதல் விவரங்களுக்கு பயன்படுத்தலாம்.
உங்கள் உண்மையுள்ள
(காஸா
சுதாகர்)
பொது
மேலாளர்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: