எட்டாவா அர்பன்கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், எட்டாவா, (யு.பி.) மீது அபராதம் விதிக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
எட்டாவா அர்பன்கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், எட்டாவா, (யு.பி.) மீது அபராதம் விதிக்கப்பட்டது
தேதி: மார்ச் 06, 2019 எட்டாவா அர்பன்கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், எட்டாவா, (யு.பி.) மீது வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்) பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4)ன் படி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (AACS) பிரிவு 36 (1) இன் கீழ் வழங்கப்பட்ட மேற்பார்வை வழிமுறைகள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும் மற்றும் செயல்படும் /இடம், கிளை அங்கீகாரக் கொள்கை, விரிவாக்க கவுண்டர்கள், ஏடிஎம்களைத் துவக்கல் / மேம்படுத்துதல் மற்றும் அலுவலகங்களை மாற்றுவது / பிரித்தல் / மூடுவதை மீறியதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி எட்டாவா அர்பன்கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், எட்டாவா (U.P) மீது இந்திய ரிசர்வ் வங்கி ₹ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வங்கி விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/2116 |