RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78493521

குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன
மாற்றிக்கொள்ளும் வசதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நவம்பர் 22, 2016

குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன

மாற்றிக்கொள்ளும் வசதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக
அறிக்கை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

செல்லுபடியாகாத ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை வங்கி முகப்புகளில் மாற்றிக்கொள்ளவோ அல்லது வங்கிக்கணக்குகளில் வரம்பின்றி டெபாசிட் செய்து கொள்ளவோ பொதுமக்களுக்கு வசதியும் அவகாசமும் அளிக்கப்பட்டது. ஏனெனில் இந்த நோட்டுகளை அறிவிப்பு நாளன்று வைத்துள்ள பொதுமக்கள் அவற்றின் மதிப்பினைப் பெறவேண்டும் என்பதற்காகவே மாற்றிக்கொள்ளும் வசதி அல்லது அவற்றை வங்கியில் டெபாசிட் செய்யும் வசதி அளிக்கப்பட்டது.

ஆனால், சில எளிதில் ஏமாறக் கூடியவர்கள் மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதாகவும், கணக்குகளில் டெபாசிட் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா கணக்குகளும் இதற்குப் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

அதிகாரப் பூர்வமற்ற முறையில் பிறரின், குறிப்பிட்ட நோட்டுகளுக்கான பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது சட்டப்படி தவறாகும். அதற்குரிய தண்டனையும் விதிக்கப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1283

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?