RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78438712

அனைவரையும் சேர்த்த நிதியியல்

RBI/2005-06/204
DBOD.No.Leg.BC.44/09.07.005/2005-06                                         நவம்பர் 11, 2005

பிராந்தியக் கிராம் வங்கிகள் தவிர
அனைத்து வணிக வங்கிகளுக்கும்

அன்புடையீர்,

அனைவரையும் சேர்த்த நிதியில்

2005-06 ஆண்டுக் கொள்கை அறிக்கையின் இடைக்காலச் சிராய்வின் 96 வது பாராவைப் பார்க்கவும்.

2. வங்கிப் பழக்கவழக்கங்கள், பல பகுதி மக்களை வங்கி இயக்கதிலிருந்து வெளியேயே வைத்துக் கொண்டிருப்பதை கவலையோடு, 2005 ஏப்ரல் ஆண்டுக் கொள்கை அறிக்கை ஏற்றுக் கொள்வதோடு , அப்படிப்பட்ட பல பகுதி மக்களையும் வங்கி இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் குறிக்கோளுடன் அத்தகைய பழக்க வழக்கங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது. பல இலவச சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கினாலும், குறைந்த அளவு இருக்க வேண்டிய நிலுவைத் தொகை, என்பது வங்கி கணக்கு துவக்க நினைக்கும் பலபகுதி மக்களைத் துவக்க விடாமல் தடுக்கிறது.

3. இத்தகைய சூழ்நிலையில், அனைவரையும் சேர்த்த நிதியியலை அடையும் வண்ணம் ஆடம்பரமற்ற அடிப்படை கணக்கு ஒன்றினை அனைத்து வங்கிகளும், பல பகுதி மக்களையும் வங்கியியலில் சேர்ப்பதற்காக தங்கள் தங்கள் வங்கியில் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கணக்குகளில் குறைந்த அளவு நிலுவைத் தொகை ஓனறுமே இல்லாமலும் அல்லது மிக மிகக் குறைந்த அளவுடையதாகவோ இருக்க வேண்டும். பல பகுதி மக்களும் கணக்கு துவக்க வசதியாக இத்தொகை அமைந்திடல் வேண்டும். இக்கணக்குகளை இயக்குவது பற்றியும் அதன் விபரங்களையும் வாடிக்கையாளரிடம் முன் கூட்டியே அவர் கணக்குத் துவக்கும் முன்னரே தெளிவுற அறிவிக்க வேண்டும். இத்தகைய ஆடம்பரமற்ற அடிப்படைக் கணக்குகள் தங்கள் தங்கள் வங்கியில் நடைமுறையில் இருப்பதற்கு இணைய தளம் உள்ளிட்ட பல வகையான வழிகளில் பரவலாக விளம்பரம் செய்ய வேண்டும்.

4. காலாண்டுக்கு ஓரு முறை எத்தனை ஆடம்பரமற்ற அடிப்படைக் கணக்குகள் துவக்கப்பட்டன என்ற அறிக்கையையும் ஓவ்வொரு வங்கியும் ரிசர்வ் வங்கிக்கு அறிவித்திட வேண்டும்.

5. தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே மேற்கொண்டு, ஒரு மாத காலத்திற்குள் தங்கள் செயலாக்கத்தை எங்களுக்கு அறிவிக்க வேண்டுகிறோம்.

6. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

நம்பிக்கையுள்ள

பிரசாந் சரண்
தலைமை பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?