RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78475567

நிதியியல் கல்வி உபகரணங்கள்

மார்ச் 10, 2017

நிதியியல் கல்வி உபகரணங்கள்

பொதுமக்களுக்காக நிதிக்கல்வி குறித்த தகவல்களை அளிக்கும்பொருட்டு, FAME (Financial Awareness Messages) என்ற பெயரில் விழிப்புணர்வு தகவல்களை ஒரு சிறுபுத்தக வடிவில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அமைப்பு / பொருள் / நடுநிலை சார்ந்த 11 விழிப்புணர்வு தகவல்கள் அதில் உள்ளன. உதாரணங்கள் பின்வருமாறு – ஒரு வங்கிக் கணக்கு தொடங்கும்போது “உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்“ (KYC) நிபந்தனைகளுக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் விவரங்கள், திட்டமிட்டு, பட்ஜெட் போட்டு செலவழித்தல், சேமித்தல், பொறுப்புடன் கடன் வாங்குதல், கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி நல்ல கடன் மதிப்பீடு பெறுதல், வாயில் அருகே அல்லது வீட்டின் அருகில் உள்ள பகுதியில் வங்கிச்சேவை பெறுதல், வங்கியிடம், வங்கிக் குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கும் செயல்முறை, மின்னணு ஊடக முறையிலான பண அனுப்பீடுகள் பயன்படுத்தும் முறைகள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்/ அமைப்புகளில் மட்டுமே முதலீடு செய்தல் ... போன்றவை. நிதிச் சேவை, வங்கிச்சேவை மற்றும் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, மின்னணு ஊடக முறைக்கு மாறுதல், மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு இவற்றை மேம்படுத்தலே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த புத்தகம் பிராந்திய மொழியில் /en/web/rbi/financial-education/downloads/financial-awareness-messages என்ற இணைய முகவரியில் தளவிறக்கம் செய்தால் கிடைக்கும்.

ஒருங்கிணைக்கப்பட்ட பணமாற்று இடைமுகம் UPI (Unified Payment Interface) மற்றும் *99# முறைசாரா கூடுதல் சேவை தகவல் USSD (Unstructured Supplementary Service Data) ஆகியவை குறித்த விளம்பர அறிவிப்புகளைத் தளவிறக்கம் செய்து பிராந்திய மொழிகளில் பெறலாம்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2426

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?