வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்குஅன்னியப் பணத்தாள்களும் நாணயங்களும்
அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும், முழு அளவில் பணமாற்றம் செய்வோரும், இப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு, அந்நியப் பணத்தாள்களையும் நாணயங்களையும் 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு ஈடான அளவில், ரிசர்வ் வங்கியின், முன் அனுமதியின்றி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிவுறுத்தல்களை எளிமையாக்கும் வகையில் மாற்றம் செய்து இதனைத் தெரிவித்துள்ளது. அந்நியப் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றை வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு வழங்குவதற்கு இப்போதுள்ள எல்லை 500 அமெரிக்க டாலர்களாகும்.
அல்பனா கில்லாவாலா
பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு-2001-2002/577
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: