RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441143

அயல்நாட்டுச் செலாவணி கண்காணிப்புச் சட்டம் 1999 நடப்புக் கணக்கு நடவடிக்கைகள் வெளிநாடுகளில் பன்னாட்டுக் கடன் அட்டை பயன்பாடு
A.P. (DIR Series) சுற்றறிக்கை எண்.73 (ஜனவரி 24, 2003)

அயல்நாட்டுச் செலாவணி கண்காணிப்புச் சட்டம் 1999

நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்

வெளிநாடுகளில் பன்னாட்டுக் கடன் அட்டை பயன்பாடு

A.P. (DIR Series) சுற்றறிக்கை எண்.73 (ஜனவரி 24, 2003)

 

 

ஜனவரி 24, 2003

A.P.(DIR Series) சுற்றறிக்கை எண் 73

 

 

அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வர்த்தகர் அனைவருக்கும்

அன்புடையீர்,

 அயல்நாட்டுச் செலாவணி கண்காணிப்புச் சட்டம் 1999

நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்- வெளிநாடுகளில் பன்னாட்டுக்

கடன் அட்டை பயன்பாடு

இந்திய அரசின் 3 மே 2000 தேதியிடப்பட்ட அறிவிப்பு எண். G.S.R.381(E)ல் குறிப்பிட்ட அந்நியச் செலாவணிகண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்) விதிகள் 2000, திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் S.O.301(E) 30.3.2001 தேதியிடப்பட்டதில் உள்ள விவரங்களின்படி நடப்புக் கணக்கு நடவடிக்கைகள் சிலவற்றிற்காக அயல்நாட்டு நாணயத்தை சேமிப்பிலிருந்து பெறுதல் தடைசெய்யப்படுகிறது வேறுசில நடவடிக்கைகளுக்கு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் கவனிப்பாராக.

2. இந்திய அரசின் அறிவிப்பு எண். G.S.R.381(E) 3 மே 2000 தேதியிடப்பட்டது திருத்தியமைக்கப்பட்டு 15.1.2003 தேதியிடப்பட்ட அறிவிப்பு எண் G.S.R.33(E) ஆக வெளியிடப்பட்டது. அதன்படி, அந்நியச் செலாவணிகண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்) விதிகள் 2000ல் உள்ள விதி 5ன்படி ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற்று பன்னாட்டுக் கடன் அட்டைகள் பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடு பின்வருவனவற்றிற்கு இல்லை. இந்தியக் குடியிருப்பாளர்  இந்தியாவிற்கு வெளியே சுற்றுலா செல்கையில் தன் செலவுகளுக்காக கடன் அட்டையில் குறிப்பிட்ட வரம்பு வரை கடன் அட்டையை பயன்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற தேவையில்லை என்பதை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  FEMA 1999 ன் சட்டத்தின் கீழ் பண அளவு/செயல்பாட்டு அளவிலோபன்னாட்டுக் கடன் அட்டைகள் பயன்பாட்டிற்கு ஏதும் ரிசர்வ் வங்கி விதிக்காவிடின் தடைபடுத்தப்பட்ட விஷயங்களான, லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குதல், சூதாட்டம் போன்றவைகள், தடைபடுத்தப்பட்ட பத்திரிக்கைகள் வாங்குதல், மீட்டு அழைக்கும் வசதிகளுக்குச் செலவு செய்தல் ஆகியவற்றிற்காக கடன் அட்டைகள் பயன்படுத்தப்படக்கூடாது. இந்த தடைகள் தொடர்ந்து நீடிக்கும்.

3. இந்த  சுற்றறிக்கையில் அடங்கியுள்ள விவரங்களைத் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் தத்தம் குழு சார்ந்த முகவர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்வாராக.

4. இந்தச்  சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கட்டளைகள் யாவும் FEMA 1999 (42 of 1999) ன் சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் சட்டப்பிரிவு எண் 11(1)ன் கீழ் வெளியிடப்படுகிறது.

 

 

தங்கள் உண்மையுள்ள

 

 

கிரேஸ் கோஷி

தலைமைப் பொது மேலாளர்

 

இந்திய அரசின் அறிவிப்பு வெளியீட்டு இதழ்

(தனிப்பட்ட)

பகுதி II - பிரிவு  3  - உட்பிரிவு  (1)

 

வெளியீடுஅதிகாரத்தின்பேரில்

புதுதில்லிவியாழக்கிழமைஜனவரி 16, 2003

எண். 23, நிதி மற்றும் குழும நடவடிக்கைகள் அமைச்சகம்

(பொருளாதார நடவடிக்கைகள் துறை)

அறிவிப்பு

புதுதில்லி - ஜனவரி 16, 2003

 

G.S.R.381 (E) – பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு FEMA 1999 (42 of 1999) ன் சட்டப்பிரிவு எண் 5(1) மற்றும் சட்டப்பிரிவு எண் 46(2)ன் பகுதிக் கூறு (a) ன்படி  அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பிரயோகித்தும், ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின்பேரிலும் மத்திய அரசு கீழ்க்கண்ட திருத்தங்களை “அந்நியச் செலாவணிகண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்) விதிகள் 2000” செய்துள்ளது.

         i.            சுருக்கமான தலைப்பு மற்றும் ஆரம்பம்

                        i. இந்த விதிகளஅந்நியச் செலாவணிகண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்) (திருத்தப்பட்ட) விதிகள் 2003 ” என்று அழைக்கப்படும்.

 

        ii.            அரசின் அறிவிப்பு வெளியீட்டு இதழில் பிரசுரமான தேதியிலிருந்து அவை அமலுக்கு வரும்.

                        ii.

      iii.            அந்நியச் செலாவணி கண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்) (திருத்தப்பட்ட) விதிகள் 2000ல் விதி 6க்குப் பிறகு, பின் வரும் விதி சேர்க்கப்படும்.

“7. இந்தியாவிற்கு வெளியேயிருக்கும்போது பன்னாட்டுக் கடன் அட்டை பயன்பாடு - இந்தியாவிற்கு வெளியே சுற்றிப்பார்க்கச் செல்லும் நபர் அவரின் செலவுகளுக்காக பன்னாட்டுக் கடன் அட்டை பயன்படுத்தும் விஷயத்தில், விதி 5ல் சொல்லப்பட்ட எதுவும் பொருந்தாது.”

 

அடிக்குறிப்பு: முக்கிய விதிகள்: அரசின் அறிவிப்பு வெளியீட்டு இதழ்  .சு.எண்.GSR 381(E) 3.5.2000 தேதியிடப்பட்டது. பாகம் II - பிரிவு 3(1)  S.O.301  (E) 30.3.2001 தேதியிடப்பட்டது.

 

[F.No.1/5E.C./2000 Vol. II]

சஞ்சீவ் மிஸ்ரா

இணைகாரியதரிசி

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?