தங்க நாணயமாக்கல் திட்டம், 2015 - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்க நாணயமாக்கல் திட்டம், 2015
RBI/2017-18/79 அக்டோபர் 17, 2017 அனைத்து முகவர் வங்கிகள் அன்புடையீர் தங்க நாணயமாக்கல் திட்டம், 2015 மேற்கண்ட பொருள் பற்றிய, மார்ச் 06, 2017 தேதியிட்ட சுற்றறிக்கை எண் DGBA. GAD.2294/15.04.001/2016-17-ஐ, அக்டோபர் 22, 2015 தேதியிட்ட முதன்மை வழிகாட்டுதல் அறிக்கை எண் DBR. IBD. 45/23.67.003/2015-16 உடன் (மார்ச் 31, 2016 வரை மேம்படுத்தப்பட்டது)ஐப் பார்க்கவும். 2. நடுத்தர மற்றும் நீண்ட கால அரசு (MLTGD) டெபாசிட்டுகள் தொடர்பாக வங்கிகள் வழங்கிடும் தொகை, இந்தியரிசர்வ் வங்கி நாக்பூரில் உள்ள மத்திய கணக்குப் பிரிவின் (CAS) மூலம் அவற்றிற்கு திருப்பி அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 3. அதற்கிணங்க, வைப்புதாரர்களுக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய வட்டித் தொகையை உடனடியாக கொடுக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் எதிர்காலத்தில், வைப்புதாரர்களுக்கு சரியான தேதிகளில் வட்டி வழங்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு வங்கிகள் பணம் வழங்கிய பிறகு, ரிசர்வ் வங்கி நாக்பூரில் உள்ள மத்திய கணக்குப் பிரிவின் (CAS) மூலம் அரசிடம் அத்தொகையைக் கோரலாம். இங்ஙனம் (D. J. பாபு) |