தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 (திருத்தம்) - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 (திருத்தம்)
RBI/2015-16/221 நவம்பர் 03, 2015 அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அன்புடையீர் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 (திருத்தம்) வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949, பிரிவு 35A-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பிரயோகித்து இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015-ன் கீழ் உள்ள முக்கிய வழிகாட்டுதல் அக்டோபர் 22, 2015 தேதியிட்ட எண் DBR.IBD.No.45/ 23.67.003/2015-16 பின்வருமாறு திருத்தியமைக்கப்படுகிறது. நடப்பிலுள்ள பத்தி எண் 2.1.2 பின்வருமாறு திருத்தியமைக்கப்படுகிறது. “குறைந்தபட்ச வைப்பு என்பது ஒரு முறையில் 30 கிராம் உலோகத்தங்கமாக (கட்டிகள், நாணயங்கள், ஆபரணங்கள் [கல் மற்ற உலோகங்கள் நீங்கலாக]) இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் வைப்புக்கு உச்ச வரம்பு ஏதுமில்லை“. இங்ஙனம் (ராஜேந்தர் குமார்) |