தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 – வட்டி விகிதம் - ஆர்பிஐ - Reserve Bank of India
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 – வட்டி விகிதம்
RBI/2015-16/220 நவம்பர் 03, 2015 அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அன்புடையீர் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 – வட்டி விகிதம் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி அளித்த முக்கியவழிகாட்டுதல் அக்டோபர் 22, 2015 தேதியிட்ட DBR. IBD. NO. 45/23.67.003/2015-16-ஐப் பார்க்கவும். 2. இது தொடர்பாக, மேற்குறிப்பிட்ட முக்கிய வழிகாட்டுதலின் பிரிவு எண் 2.2.2 (iv)-ன்படி மத்திய அரசு தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் உள்ள நடுத்தர மற்றும் நீண்டகால அரசு வைப்பு (MLTGD) மீதான வட்டியைப் பின்வருமாறு நிர்ணயம் செய்துள்ளது.
3. இந்திய அரசு அறிவித்துள்ள சேகரிப்பு மற்றும் தூய்மை பரிசோதனை மையங்களாக செயல்பட தகுதியுடைய நிறுவனங்கள் (CPTCs) மற்றும் தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தில் பங்கேற்கும் சுத்திகரிப்பாளர்களின் பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. (ராஜேந்திர் குமார்) |