தன் நினைவு, மூளை உதவியற்ற நிலை, மூளைச் செயல்பாட்டு பாதிப்பு மற்றும் பல்முனை அங்கஹீனங்கள் உடையோருக்கு சட்டபூர்வ காப்பாளர் சான்றிதழ் தேசிய பொறுப்பாட்சி குழு சட்ட - ஆர்பிஐ - Reserve Bank of India
தன் நினைவு, மூளை உதவியற்ற நிலை, மூளைச் செயல்பாட்டு பாதிப்பு மற்றும் பல்முனை அங்கஹீனங்கள் உடையோருக்கு சட்டபூர்வ காப்பாளர் சான்றிதழ் தேசிய பொறுப்பாட்சி குழு சட்ட
RBI/2007-08/189 DBOD.No.Leg.BC.51/09.07.005/2007-08 |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நவம்பர் 19, 2007
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அன்புடையீர், தன் நினைவு, மூளை உதவியற்ற நிலை, மூளைச் செயல்பாட்டு பாதிப்பு தன் நினைவு, மூளை உதவியற்ற நிலை, மூளைச் செயல்பாட்டு பாதிப்பு மற்றும் பல்முனை அங்கஹீனங்கள் உடையவர்களின் நலனுக்காக தேசிய பொறுப்பாட்சி எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளபடி கீழ்க்கண்ட கேள்வி எழுப்பப் படுகிறது. வங்கிகள் மற்றும் வங்கித்துறை சட்டபூர்வ காப்பாளர் சான்றிதழ்களை ஒப்புக்கொள்வதை அனுமதிக்க முடியுமா? 2. தேசிய பொறுப்பாட்சி குழு குறிப்பிடுவது என்னவென்றால் மேற்கண்ட சட்டம் பாராளுமன்றத்தால் இசைவளிக்கப்பட்டு மனநிலை பாதிப்பு உடையவர்களுக்கு சட்டபூர்வ/காப்பாளர்கள் நியமனம் செய்வதை அங்கீகரிக்கின்றது. இச்சட்டத்தின்கீழ் வட்டார அளவிலான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனநல பாதிப்பு உடையவர்களுக்கு சட்டபூர்வ காப்பாளர் நியமிக்கப்படுவதற்கு இச்சட்டம் வகை செய்கிறது. சட்டபூர்வ காப்பாளராக நியமிக்கப்பட்டவர் ஒரு வங்கிக்கணக்கை துவங்கவும், செயல்படுத்தவும் அவர் அப்பதவியில் தொடரும்வரை முடியும். 3.இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆலோசனையோடு இவ்விஷயம் பரிசீலிக்கப் படும் பொறுப்பாட்சி குழுவின் மேற்சொன்ன கருத்துக்களோடு சங்கத்தின் கருத்துகளும் ஒத்துப்போயின. மேலும் மன நலசட்டம் 1987ன் ஷரத்துக்களின்படி, மாவட்ட நீதிமன்றங்கள், காப்பாளர்களை நியமிக்க அனுமதி உண்டு. 4. இதனால் வங்கிகள் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால், வங்கிக் கணக்கு துவங்கவும்/இயக்கவும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேற்சொன்ன சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வட்டார அளவிலான குழுக்கள் ஆகியவற்றின் மூலம் கொடுக்கப்பட்ட காப்பாளர் சான்றிதழை நம்பலாம் என்பதாகும். வட்டார அளவிலான குழுக்களின் பட்டியல் மேற்சொன்ன பொறுப்பாட்சி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது, இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 5. இது விஷயத்தில் வங்கிகள் தங்களது கிளைகளுக்கு சரியான வழிகாட்டுதலை அளிக்கும்பட்சத்தில் குறைபாடுடைய நபர்களின் பெற்றோர்கள்/உறவினர்கள் எவ்விதமான சிரமத்தையும் சந்திக்கமாட்டார்கள். தங்கள் உண்மையுள்ள (பிரஷாந்த் சரண்)
|