Guidelines for relief measures by banks in areas affected by natural calamities- utilisation of insurance proceeds - ஆர்பிஐ - Reserve Bank of India
Guidelines for relief measures by banks in areas affected by natural calamities- utilisation of insurance proceeds
RBI/2016-17/436 ஜுன் 30, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அம்மையீர் / ஐயா இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காப்பீடு வருமானத்தை ஜூலை 01, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை FIDD.No.FSD.BC.01/05.10.001/2015-16 -ன்படி, இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வங்கிகள் கடனாளிகளுக்கு புதிய கடனை வழங்கியிருப்பின், காப்பீட்டு நிறுவனங்களீடமிருந்து ஏதேனும் வரவுகள் இருப்பின், அவற்றை மறுசீரமைக்கப்பட்ட கணக்குகளில் சரி செய்யவேண்டுவது அவசியமாகும். 2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரங்களைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் புதிய கடனை அளிக்கும்போது, காப்பீட்டுத் தொகை வருவது நிச்சயமாக இருந்தால், அதன் வரவிற்காகக் காத்திராமல், ஒத்துணர்வுடன் நடந்துகொண்டு, கணக்குகளை மறுசீரமைக்கவும் புதியகடன்களை வழங்கவும் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இங்ஙனம் (உமா சங்கர்) |