RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78444449

“உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்” என்பதற்கான வழிகாட்டு நெறிகளும் முறைமைகளும் மற்றும் “பண பரிவர்த்தனைகளும்”

DBOD.AML.BC.18/14.01.001/2002-03 ஆகஸ்ட் 16, 2002

அனைத்து வணிக வங்கிகளின்

தலைமை அலுவலர்களுக்கும்

அன்புடையீர்,

“உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்” என்பதற்கான வழிகாட்டு நெறிகளும் முறைமைகளும் மற்றும் “பண பரிவர்த்தனைகளும்”

 “உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்” (KYC) என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி, வாடிக்கையாள்ர்களை அடையாளங் கண்டு கொள்வது தொடர்பாக பல வழிகாட்டு நெறிகளை வெளியிட்டிருக்கிறது. அதில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை கண்காணித்திடவும் நுண்ணாய்வு செய்திடவும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் மற்றும் முறைகேடாக பணம் எடுத்தல் போன்றவைகளை இனங்கண்டு கொள்ளுதலையும், நிதி மோசடிகளைக் கட்டுப் படுத்தவும் உதவும் நடைமுறைகளையும் அமைப்புகளையும் வங்கிகள் உருவாக்கிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. புது கணக்குகளைத் தொடங்கும்போது, மோசடிக் குற்றங்கள் புரிய, வங்கி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வங்கிகள் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தி, ரிசர்வ் வங்கி அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. தற்போது பார்வையில் உள்ள விஷயங்களைப்பற்றி கடந்த காலத்தில் வெளிவந்த சுற்றறிக்கைகளின் சாரம் இணைப்பில் பட்டியலிடப் பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் சமீபகாலமாக ஏற்பட்ட வளர்ச்சிகளை கருத்தில்கொண்டு, KYC நெறிமுறைகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் பற்றிய நடப்பிலுள்ள உத்தரவுகளை, ஒருங்கிணைத்து வலியுறுத்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நாம் முன்பு பிறப்பித்த உத்தரவுகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகள் தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதையோ அல்லது குற்ற நடவடிக்கையிலிருந்து பெறப்பட்ட பணம் வைப்புத் தொகையாக்குவதையோ (வைப்பு மற்றும் கடன் கணக்கு ஆகிய இரண்டிலும்) செய்வதற்கு கவனக்குறைவான நிலையில் வங்கிகள் பயன்படக் கூடாது என்று பாதுகாப்பு உத்திகளாக்கின்றன. வழிகாட்டு நெறிமுறைகள் வெளிநாட்டு பண கணக்கு மற்றும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.

2. புது கணக்குகளுக்கு, “உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்” (KYC) பற்றிய வழிகாட்டு நெறிகள்

கீழ்க்கண்ட KYC வழிகாட்டு நெறிகள் புதிய கணக்குகள் அனைத்திற்கும் உடனடியாக பொருந்தும்.

2.1 “உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்” கொள்கை

(i) ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ புது கணக்கு தொடங்கும்போது “உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்” (KYC) நடைமுறைகளே முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளரை இனங்கண்டு கொள்ளும்பொழுது கீழ்க்கண்ட விஷயங்களை பரிசீலிப்பது இன்றியமை யாததாகிறது. அவை வங்கிக்கு நன்கு தெரிந்த நபர் அல்லது ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் ஆகியோரிடமிருந்து அறிமுக அத்தாட்சி மற்றும் வாடிக்கையாளரின் ஆவணங்களின் அடிப்படை.

(ii) தனிநபரோ அல்லது நிறுவனமோ புது கணக்கு தொடங்கும்போது நேர்மையான இனங்கண்டுகொள்ளும் முறைகளை நிலைநிறுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை வங்கிகளின் இயக்குனர் குழுமம் உருவாக்கிட வேண்டும். சந்தேகத்திற்கிடமான கணக்குகளையும் பரிவர்த்தனைகளையும் கண்காணிப்பதற்கான முறைமைகளையும் செயல்பாடுகளையும் ஏற்படுத்திடும் கொள்கைகளை குழுமம் உருவாக்கிட வேண்டும். அத்தகைய பரிவர்த்தனைகளைப் பற்றி உடனடியாகத் தகவல் அளித்திடும் முறைமைகளும் வேண்டும்.

2.2 வாடிகையாளர் இனங்கண்டு கொள்ளப்ப்டுதல் 

(i) KYC வரைசட்டத்தின் நோக்கங்கள் இரண்டு பிரிவாகும்.

  • சரியான முறையில் வாடிக்கையாளரை இனங்கண்டு கொள்வது உறுதி செய்யப்படுதல்.

  • சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை கண்காணிப்பது.

ஒவ்வொரு புது வாடிக்கையாளருக்கும், அவரது அடையாளம் மற்றும் சட்டபூர்வ வசிப்பு போன்ற எல்லா விவரங்களையும் வாடிக்கையாளர்கள் தாங்களே தெரிவிப்பதிலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். சாதாரணமாக எளிய முறையில் அடையாளங் கண்டு கொள்ள உதவும் ஆவணங்களாக பயண இசைவுச் சீட்டு (பாஸ்போர்ட்) ஓட்டுனர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களும் உள்ளன. ஒருவேளை அப்படிப்பட்ட ஆவணங்கள் இல்லையென்றால் ஏற்கனவே கணக்கு உள்ளவர்கள் அல்லது வங்கிக்கு நன்கு பரிச்சயமானவர்கள் தரும் அறிமுகக் கடிதங்களை சரிபார்ப்பது போதுமானது. அதே நேரத்தில் சில நடைமுறைகள் கடைபிடிக்கப் படுவதால் சாதாரண பொது மக்களுக்கு வங்கிச் சேவைகள் மறுக்கப்படும் நிலை உருவாகிவிடக்கூடாது.

(ii) இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்தின் செயல் குழு ஒன்று, இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிப்புக்காக வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை ஒன்றை பார்க்க வேண்டுகிறோம். கறுப்பு பணம் ஒழிப்பை கருத்தில் கொண்டு KYC முறைமைகளை வலுப்படுத்த இந்திய வங்கிகள் சங்கத்தின் செயல் குழு பல சிபாரிசுகளை செய்துள்ளது. வாடிக்கையாளர் பற்றி குறிப்பு, கணக்கு தொடங்க நடைமுறைகள், சில குறிப்பிட்டவகை வாடிக்கையாளர்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்வது, என்பதெற்கெல்லாம் சில வடிவங்களை உருவாக்கி அதோடு சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் பற்றி விரிவான பட்டியலையும் அளித்துள்ளது.

3. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு, “உங்கள் வாடிக்கையாளரை தெறிந்து கொள்ளுங்கள்” முறைமைகள்.

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் கணக்கு தொடங்கும் சமயத்தில் சரியான KYC முறைமைகளையும் சரியான ஊக்கத்துடன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையில் உள்ள உத்தரவுகளின்படி வங்கிகள் செயல்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், ஏதேனும் விடுபட்டிருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளரை அடையாளங் கண்டு கொள்ள தேவையான KYC முறைமைகள் மிக குறுகிய காலத்தில் முடிக்கப் பட்டிருக்க வேண்டும்.

4. பணப் பரிவர்த்தனைகளின் வரம்பும் கண்காணிப்பும்

 இவ்விஷயத்தில் நடைமுறையில் உள்ள ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிகள் கீழ்க்கண்டவாறு 

(i) ரூ 50,000மும் அதற்குமேலும் மதிப்புள்ள பயணக் காசோலைகள், கேட்புவரை வோலைகள், தந்திமுறை அனுப்புதல் போன்றவற்றிற்கு பணம் அல்லாமல் வாடிக்கையாளரின் கணக்கில் பற்று வைத்து வழங்கவேண்டும் என்று வங்கிகள் செயல்படவேண்டும். (சுற்றறிக்கை DBOD.BP.BC.114/ C.469(81)-91, 1991 ஏப்ரல் 19 தேதியிட்டது) மேலும், விண்ணப்பதாரர்கள் (வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) மேற்கண்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ 10,000 த்தை தாண்டும்போது நிரந்தர (வருமான வரி) கணக்கு எண்ணை விண்ணப்பங்களில் பதித்திடல் வேண்டும். (சுற்றறிக்கை DBOD.BP.BC.92/C.469-76, 1976 ஆகஸ்ட் 12 தேதியிட்டது) எனினும் KYC நடைமுறைகள், ரூ 50,000 மும் அதற்கு மேற்பட்ட தொகைக்கும் கேட்பு வரைவோலை வழங்கப்படும்போது வாடிக்கையாளர் அடையாளம் தெரியவேண்டுமென்று எதிர்பார்க்கப் படும்போது, நிரந்தரக் கணக்கு எண், ரூ 50,000 என்னும்போது தெரிவிக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

(ii) இருப்புக்குமேல் பணம் எடுப்பு அல்லது பணக்கடன், வைப்பு ஆகியவைகளிலிருந்து ரூ10 லட்சமும் அதற்கு மேலும் பணம் எடுக்கப் பட்டாலோ அல்லது போடப்பட்டாலோ, வங்கிகள் அவற்றை உன்னிப்பாக கவனித்திட வேண்டும். அதோடு அத்தகைய பெரிய பண பரிவர்த்தனைகளை ஒரு தனி பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். (சுற்றறிக்கை DBOD.BP.BC.57/ 21.01.001/95, 1995 மே 4 தேதியிட்டது)

(iii) வங்கிக் கிளைகள், ரூ10 லட்சமும் அதற்கு மேற்பட்ட தொகைக்குமான பணம் போடும் மற்றும் எடுக்கும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும், அதோடு சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளையும் பற்றிய அனைத்து விவரங்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு மாதமிரு முறை அறிக்கைகளாக அளிக்க வேண்டும். இது தவிர கட்டுப்பாட்டு அலுவலகங்கள் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைப் பற்றி தலைமை அலுவலதங்களுக்கு விவரித்திடல்வேண்டும். (சுற்றறிக்கை DBOD.BP.BC.101/ 21.01.001/95, 1995 செப்டெம்பர் 20 தேதியிட்டது) வங்கிக் கிளைகளின் அறிக்கைகளை விரைவான கணினி மயமாக்குதல் அத்தகைய அறிக்கைகளை குறித்தகாலத்திற்குள் உருவாக்கிட உதவிடும்.

5. இடர்வரவு நிர்வாகமும் மற்றும் கண்காணித்திடும் நடைமுறைகளும்

 தேச விரோத மற்றும் சட்டதை மீறிய செயல்களுக்கு வங்கித்துறை வழிகள் தவறாகப் பயன்படக்கூடிய சூழ்நிலை எழும்பட்சத்தில் அதைத் தடுக்க, மேற்கண்ட தேவைகளை உள்ளடக்கிய கீழ்க்கண்ட கொள்கைகளை வாரியம் ஏற்படுத்தியுள்ளது.

5.1 உள்முக கட்டுப்பாட்டு முறைகள்

 ஏற்கனவே உள்ள மற்றும் வரப்போகிற வைப்புக் கணக்குகளுக்கு KYC திட்டம் திறம்படவும் முழுமையாகவும் முழு ஈடுபாட்டுடனும் நிர்வகிக்க நடைமுறைகளையும் கொள்கைகளையும் உறுதிப்படுத்த கடமைகளையும் பொறுப்புக்களையும் தெளிவாகப் பிரித்தளித்திடல் வேண்டும். கிளை மட்டத்தில் அதிகாரிகள், வகுக்கப்பட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கிறார்களா என்று வங்கிகளின் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் அவவவ்போது கண்காணித்திட வேண்டும்.

5.2 பயங்கரவாத நிதி

 இந்திய அரசால் வெளியிடப்பட்ட தீவிரவாத ஸ்தாபனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளின் சுற்றுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இதனால் வங்கிகள், அத்தகைய ஸ்தாபனங்களுடன் ஏதேனும் பரிவர்த்தனை இருந்தால் எச்சரிக்கையுடன் செயல்படும். வங்கிக் கிளை அளவில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி அத்தகைய பட்டியலை கண்டுகொள்வதை உறுதிசெய்ய வேண்டும். அப்பொழுதுதான் இனி வரப்போகிற அல்லது ஏற்கனவே உள்ள வர்த்தக உறவுமுறையில் உள்ள தனிநபரோ அல்லது நிறுவனமோ அத்தகைய பட்டியலில் உள்ளதா என்பதனை தீர்மானிக்க முடியும். அரசிடம் ஆலோசித்த பிறகு சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத ஸ்தாபனங்களின் கணக்குகளை வங்கிகள் அதிகாரமுடையவரிடம் புகார் அளிக்கலாம்.

5.3 உள்முக கணக்கு தணிக்கை/ஆய்வு 

(i) உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை இனங்கண்டு அவற்றை சுயேச்சையாக மதிப்பிடவும் கட்டுப்படுத்தவும் வங்கிகளின் உள்முக கணக்கு தணிகை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.

(ii) கருப்பு பணம் ஒழித்தலிலும், KYC முறைமைகளை கடை பிடித்தலிலும் வங்கிக் கிளைகள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் திறன் பற்றி குறிப்பாக நுண்ணாய்ந்து தங்களின் மதிப்புரைகளை உடனுக்குடன் மற்றும் உள்ளக கணக்குத் தணிக்கையாளர்கள் அளிக்க வேண்டும். அத்தகைய முடிக்கப்பட்ட அறிக்கைகள் வங்கிகளின் வாரியத்தின் தணிக்கை குழுவிடம் காலாண்டு இடைவெளிகளில் சமர்ப்பிக்கப்படவேண்டும். இது அந்தந்த வருடத்திற்கான மறுசீராய்வில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்று 2000ம் ஆண்டு ஜூலை 14, DBOD.NO.BP.BC.3/21.03.038/2000 சுற்றரிக்கை தெரிவிக்கிறது.

5.4. சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை இனங்கண்டு கொள்வதும் புகார் அளிப்பதும்

வங்கிக் கிளைகளும் கட்டுப்பாட்டு அலுவலகங்களும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை அவைகளை அதற்கான சட்டத்தில் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட தேவையான சட்டத்தை அமல்படுத்தக்கூடிய நிர்ணயிக்கப்பட்ட அதிகரக் குழுமத்திடம் புகார்களாக அளிக்கிறார்கள் என்பதை வங்கிகள் உறுதிப் படுத்தவேண்டும். அத்தகைய அதிகாரக் குழுமத்திடமிருந்து ஆணைகள் வந்தால் அத்தகைய கணக்குகளை முடக்குவதற்கு சரியான அமைப்புகள் இருந்திடல் வேண்டும். அவ்விஷயங்கள் பற்றி உடனுக்குடன் தலைமை அலுவலகத்திற்கும் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும் அறிக்கை அளித்திடல் வேண்டும். உணர்வு பூர்வமான விஷயங்கள் என்பதால் குழுமத்தினுடைய அல்லது இயக்குனர்கள் அடங்கிய குழுமத்தினுடைய தணிக்கை குழுவிடம் அதன் சாராம்சங்களை காலாண்டு அறிக்கையாக அளிக்க வேண்டும்.

5.5 வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை

கடை பிடித்தல் (FCRA), 1976

(i) வங்கிகள், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குகுறை சட்டத்தில் (1976) உள்ள ஷரத்துக்களின் அடிப்படையிலான உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். வங்கிகளை அவை எச்சரிக்கை செய்வது என்னவென்றால், இந்திய அரசாங்கத்தால் மேலே குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம் சார்பாக மட்டுமே கணக்கு தொடங்கவோ அல்லது காசோலைகளை பற்று வைக்கவோ வேண்டும். அந்தந்த சங்கங்களிடமிருந்து கணக்கு தொடங்கும் போதோ அல்லது காசோலைகளை திரட்டும்போதோ இந்திய அரசிடம் பதிவு பெற்றவர்கள் என்பதற்கான சான்றிதழ் பெறப்படவேண்டும்.

(ii) வங்கிகளின் கிளைகள், தடைசெய்யப்பட்ட ஸ்தாபனங்களின் மற்றும் தேவையான பதிவு இல்லாதவைகளின் பெயரில் கணக்கு தொடங்குவதிலிருந்து விலகிடவும் இதனை கடைபிடிப்பதை உறுதிப்படுத்தி அதற்கு தேவையான கவனத்தை கொள்ளுமாறு வங்கிகளின் கிளைகள் அறிவுறுத்தப்படவேண்டும்.

6. பதிவேடு பராமரித்தல்

 சரியான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பரிவர்த்தனைகளையும் வாடிக்கையாளர் உறவுகளையும் பற்றிய விவரங்களை ஏற்படுத்தி பதிவேட்டில் நிதி சார்ந்த இடையீட்டாளர்கள் பராமரிக்க வேண்டும். எந்த ஒரு பரிவர்த்தனையும் மாற்றியமைக்க இது உதவுகிறது. மின் கம்பி மூலம் நடைபெறும் செலவினங்களும் செய்திகளும் அந்தக் கணக்கில் மற்ற பதிவுகள் எப்படி நடத்தப்படுகின்றனவோ அதே முறையில் நடத்தப்படவேண்டும். அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் அதன் பதிவேடுகளும் அந்த பரிவர்த்தனைகள் முடிந்து குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளாவது பாதுகாக்கப் படவேண்டும். மேலும் அவைகள் கணக்கு தணிக்கை யாளர்களுக்கும் ஒழுங்கு படுத்துவர்களுக்கும் தேவையான நேரத்தில் அவர்களது பார்வைக்கும் பரிசீலனைக்கும் அளிக்கப்படவேண்டும்.

7. ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கான பயிற்சி

 அனைத்து நடைமுறைப்படுத்தும் மற்றும் நிர்வாக ஊழியர்களும் KYC முறைமைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் தேவையை முழுமையாக புரிந்துகொள்வது மிக முக்கியம். அனைத்து நிறுவனங்களும் எனவே ஒரு தொடர் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தவேண்டும். கருப்புப் பணத்திற்கெதிரான நடவடிக்கைகளிலும் KYC கொள்ளைகளை தொடர்ந்து நிறைவேற்றுவதிலும் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டுநெறிமுறைகளில் அவரவர் மட்ட்டத்தில் உள்ள பங்குகளையும் பொறுப்புகளையும் பயிற்சிகளின் மூலம் ஊழியர்கள் உணர்ந்துகொள்வர்.

8. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு 35(A)ன் கீழ் இந்த வழிகாட்டுநெறிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை மீறுவது இச்சட்டத்தின் உரிய ஷரத்துகலின் கீழ் தண்டனைகளை ஈர்க்கும். வங்கிகள் தங்களின்க வனத்திற்கு வழிகாட்டு நெறிகளை கொண்டுசெல்லவேண்டும் என்று அரிவுறுத்துகிறோம்.

9. இந்த சுற்றறிக்கையில் உள்ள பல்வேறு வழிகாட்டுநெறிகளை கடைபிடிப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளை தலைமை பொதுமேலாளர், கருப்புப் பண ஒழிப்பு பிரிவு, வங்கியியக்கம் மற்றும் வளர்ச்சித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மைய அலுவலதம், மையம்-1, உலக வர்த்தக மையம், கஃபே பரேடு, மும்மை-400005 இந்த சுற்றறிக்கை கிடைத்த தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அனுப்பவேண்டும்.

இந்த சுற்றரிக்கையில் உள்ள உத்தரவுகளை அமல்படுத்தியதைப் பற்றி ரிசர்வ் வங்கி வங்கியாளர்களுடன் ஆறு மாதத்திற்கு பிறகு ஒரு கலந்தாய்வு செய்யும். அனைத்து விவரங்களும் அடங்கிய சுற்றரிக்கை வெளியிடுவது பற்றி இதன் பிறகு எடுத்துக் கொள்ளப்படும்.

10. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

உங்கள் நம்பிக்கைக்குரிய

 

C.R. முரளீதரன்

தலைமை பொது மேலாளர்

 இணைப்பு : 5 தாள்கள்.

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?