ரூபாய் நோட்டுகளில் கூடுதலான / மாற்றியமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
ரூபாய் நோட்டுகளில் கூடுதலான / மாற்றியமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
RBI/2004-05/458
DCM (Plg) No.G.40/10.01.00/2004-05
மே 7, 2005
தலைவர்/நிர்வாக இயக்குநர்/
தலைமை நிர்வாக இயக்குநர்/அலுவர்
பொது/தனியார்/துறை/அயல்நாட்டு/வங்கிகள
அன்புடையீர்,
ரூபாய் நோட்டுகளில் கூடுதலான / மாற்றியமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
கள்ள நோட்டுகளின் புழக்கம், குறிப்பாக ரூ 100/500 நோட்டுகளில் அதிகமாக இருப்பதால், மத்திய அரசு ஓர் உயர்மட்டக் குழுவை கூட்டி, பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துவது பற்றி விவாதித்தது. அக்குழுவின் பரிந்துரைகளை, அரசின் ஒப்புதலோடு ரிசர்வ் வங்கி பரிசீலித்து சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்தும், சிலவற்றை மாற்றி அமைத்தும் வெளியிட முடிவு செய்திருக்கிறது. புதிய, திருத்தியமைக்கப்பட்ட/கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் கள்ள நோட்டு அச்சடிப்பதில் பின்னடைவை ஏற்படுத்துவதோடு, நல்ல நோட்டுகளை எளிதாகக் கண்டு கொள்ளவும் உதவும்.
2. கூடுதலான/மாற்றி அமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடான நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும். ரூ 50/-ம் அதற்குமேலுமான ரூபாய் நோட்டுகளை 2005இல் படிப்படியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கையாளுவது என்பது ரிசர்வ் வங்கியில் இயந்திரமயமாக்கப்பட்டது அனைவரும் தெரிந்ததே. வங்கிகளும் இத்தகைய இயந்திரமயமாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எனவே வரவிருக்கும் மாற்றங்கள் பற்றி, அவசியம் வங்கிகள் தெரிந்துகொண்டால் தான், தங்கள் தங்கள் இயந்திரங்களில் தேவையான உள்மாற்றங்களை உருவாக்கி அந்த மாற்றங்களை உள்வாங்கிட முடியும். ரூ 50, 100, 500, 1000/- நோட்டுகளில் செய்யவிருக்கும் புதிய / கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தொகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் அவைகளை நன்கு கவனித்து கருத்தில் கொண்டு அத்தகைய நோட்டுகள் வெளிவரும்போது கையாளுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
3. நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் கொண்டுவரவிருக்கும் மாறுதல்கள் பற்றிக் கருத்துக்களைப் பரிமாரிக் கொள்ளவும், அவைகளை ஏற்றுக்கொள்வதற்கான தயார் நிலையை உருவாக்கிடவும் வங்கிகளின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தை விரைவிலேயே கூட்ட இருக்கிறோம். அது சம்பந்தமான அறிவிப்பு பின்னர் வரும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து நடவடிக்கைகளையும், இப்புதிய நோட்டுகளைப் புழக்கத்தில் விடும்போது ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என்று சொல்லவும் வேண்டுமா.
நம்பிக்கையுள்ள
யு.எஸ். பாலிவால்
தலைமைப் பொது மேலாளர்