இந்தியன் மெர்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ, உத்தரப்பிரதேசத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள உத்தரவுகளைத் திரும்ப பெறுதல்
செப்டம்பர் 11, 2019 இந்தியன் மெர்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) -இன் பிரிவு 35A இன் கீழ் இந்தியன் மெர்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ, உத்தரபிரதேசத்திற்கு ஜூன் 04, 2014 தேதியிட்ட உத்தரவின்படி வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்கியது. இந்த உத்தரவுகள் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக மார்ச் 05, 2019 தேதியிட்ட உத்தரவின்படி செப்டம்பர் 11, 2019 வரை நீட்டிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி, பொது நலனில் திருப்தி அடைந்து, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) - இன் பிரிவு 35A இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்தியன் மெர்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்,லக்னோ, உத்தரபிரதேசம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட (அவ்வபோது மாற்றியமைக்கப்பட்ட) உத்தரவுகளை திரும்பப் பெறுகிறது. உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் ஆர்வமுள்ள பொது உறுப்பினர்களின் பார்வைக்காக வைக்கப்படும். இனிமேல் வங்கி வழக்கமான வங்கி வணிகத்தை தொடரும். யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/669 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: