RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78448986

 நோட்டுகளைப்பிரித்தெடுத்தல் /கையாளுதல்– நோட்டுகளைப் பிரித்து வகைப்படுத்தும் இயந்திரங்களை நிறுவுதல்

RBI/2009-2010/228
DCM.No.Dir.NPD.3161/09.39.00(Policy)/2009-10

நவம்பர் 19,2009

தலைவர்/நிர்வாக இயக்குநர்/தலைமை முதன்மை அதிகாரி
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமிய வங்கிகள் மற்றும் வட்டார வங்கிகள் உள்ளடக்கிய)
பட்டியலிடப்பட்ட மாநில கூட்டுறவு வங்கிகள்/
 பட்டியலிடப்பட்ட (தொடக்கநிலை) நகர கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்,

 நோட்டுகளைப்பிரித்தெடுத்தல் /கையாளுதல்–
நோட்டுகளைப் பிரித்து வகைப்படுத்தும் இயந்திரங்களை நிறுவுதல்

அக்டோபர் 27,2009 அன்று வெளியிடப்பட்ட 2009-10ஆம் ஆண்டிற்கான பணக்கொள்கையின் இரண்டாம் காலாண்டிற்குரிய பரிசீலினை அறிக்கையின் 176ஆம் பத்தியைப் பார்க்கவும்.

2. சமீபகாலமாக புழக்கத்திலுள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதாலும் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்படும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும் இதில் அக்கறையுடைய அனைவரும் நோட்டுகளை வகைப்படுத்தி பிரித்தெடுத்தல் மற்றும் கள்ள நோட்டுக்ளை கண்டறியும் முறைகளில் உள்ள பிரச்சனையை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். கள்ள நோட்டுகளைக் கண்டறிதல் அவை மீண்டும் புழக்கத்திற்கு வராமல் தடுத்தல் மற்றும் தரமான நல்ல நோட்டுகளை புழக்கத்திற்கு அளித்தலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

3.பணத்தாள் விநியோகத்திற்கான நடைமுறை மற்றும் முறைகள் குறித்த உயர்மட்டக்குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 2009ல் சமர்ப்பித்தது. அதில் பணத்தாள் புழக்கம் வேகமாக அதிகரித்துவருவதையும் அதனால், நல்ல தரமான சுத்தமான நோட்டுகளே புழக்கத்தில் இருப்பதை வங்கிகள் உறுதிசெய்திட வேண்டுமென்று கூறி, அதற்காக சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. வங்கிகள் வழியாக நோட்டுகள் வரும்போதே சிறந்த கருவிகளைப் பயன்படுத்தி கள்ளநோட்டுகளை கண்டறிவது அவசியமாகும்.

4.வங்கிநோட்டுகள் ரூ.100 மற்றும் அதற்கு மேலுள்ள மதிப்பிலக்க நோட்டுகள் அவைகளை நல்ல நோட்டா என்பதை சோதித்தறிந்து புழக்கத்திற்கு தகுதியானவையா  என்பதை இயந்திரங்கள் மூலம் கண்டறிந்த பின்னரே, முகப்புகள் மற்றும் தானியங்கி பண வழங்கும் இயந்திரங்கள் மூலம் புழக்கத்திற்கு வெளியிடப்படவேண்டும்.  இதற்காக வங்கிகள் பின்வருமாறு செயல்பட வேண்டும்.

  1. மார்ச் 2010க்குள் சராசரியாக தினசரி ரொக்க வரவு ரூபாய்1கோடியும் அதற்கு மேலும் உள்ள வங்கிக்கிளைகளில் எல்லாம் இத்தகு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.

  2. மார்ச் 2011க்குள்  சராசரியாக தினசரி ரொக்க வரவு ரூபாய் 50லட்சத்திலிருந்து 1கோடி வரையுள்ள வங்கிக்கிளைகளிலும் இத்தகு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.

5.இந்த இயந்திரங்கள் அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கும் தர அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.

6.இதன்படி DCM.No.Dir.NPD.3158/09.39.00/2009-10, நவம்பர் 19,2009 தேதியிட்ட வழிகாட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

7. பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் அளிக்கவும்.

தங்கள் உண்மையுள்ள

(ஆர். காந்தி)
தலைமைப் பொது மேலாளர்.

இணைப்பு:மேலேகாண்க


DCM.No.Dir.NPD.3158/09.39.00(Policy)/2009-10

நவம்பர் 19,2009

நோட்டுகளை வகைப்படுத்திப்பிரித்தல் –
நோட்டுகளைப் பிரித்தறியும் இயந்திரங்கள் நிர்மானம்

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் பிரிவு 35(A)ன்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுநலன் கருதி இதைச் செய்வது அவசியம்/ தேவை என்பதைக் கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி பின்வரும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.  தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் மூலம் அல்லது வங்கி முகப்புகள் மூலம் புழக்கத்திற்கு பணம் அளிப்பதற்கு முன்னர், ரூ.100 மற்றும் அதற்குமேலுள்ள மதிப்பிலக்க நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் தர அளவீடுகளைப் பூர்த்தி செய்யும் இயந்திரங்களின் மூலம் பரிசீலித்து, வகைப்படுத்தி அளித்திடவேண்டும்.  மேலும் பின்வரும் கட்டளையையும் இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கிறது.

  1. மார்ச் 2010க்குள் சராசரியாக தினசரி ரொக்க வரவு 1கோடி ரூபாய்க்கு மேலாக உள்ள அனைத்து வங்கிக்கிளைகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிடவேண்டும்.

  2. மார்ச் 2011க்குள்  சராசரியாக தினசரி ரொக்க வரவு ரூபாய் 50லட்சத்திலிருந்து 1கோடிக்குள் உள்ள வங்கிக்கிளைகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிடவேண்டும்.

V.K. சர்மா
நிர்வாக இயக்குநர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?