500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன
RBI/2016-17/113 நவம்பர் 09, 2016 அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அன்புடையீர் 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் இந்திய அரசின் நவம்பர் 08, 2016 தேதியிட்ட அறிவிக்கை No. S.O. 3408 (E)-ஐப் பார்க்கும்படியும், கவனித்துப்படிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன்படி, நவம்பர் 08, 2016 நள்ளிரவு முதல் அதுவரை புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகாது. 2. எனினும், அறிவிக்கையின் பாரா 1 (g) மற்றும் (h)-ன்படி, இந்தக் குறிப்பட்ட நோட்டுகள் நவம்பர் 11, 2016 வரை கீழ்க்குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும். (i) சர்வதேச விமான நிலையங்களில் வந்துபோகும் பயணிகள், தம்மிடமுள்ள மேற்குறிப்பிட்ட நோட்டுகளை ரூபாய் ஐயாயிரம் வரை கொடுத்து, இதர மதிப்பிலக்க (செல்லுபடியாகும்) நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். (ii) அயல்நாட்டுப் பயணிகள் ரூ. 5000 மதிப்பு வரை மேற்குறிப்பிட்ட நோட்டுகளை அந்நியச் செலாவணியாகவோ அல்லது அந்நியச் செலாவணியைக் கொடுத்துச் செல்லுபடியாகும் பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம். 3. அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களைப் பூர்த்திசெய்து இந்த சுற்றறிக்கையை இதன் அங்கத்தினர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுமாறு வேண்டுகிறோம். 4. இந்த சுற்றறிக்கையின் கீழ் வழிகாட்டுதல்கள், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999-ன் சட்டப்பிரிவு 10 (4) மற்றும் 11 (1)-ன்படி, வேறெந்த சட்டத்திற்கும் அனுமதி தேவைப்பட்ட / எதற்கும் பங்கம் வராதபடி இந்தச் சுற்றறிக்கையில் உள்ள இந்த உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. இங்ஙனம் (சேகர் பட்நாகர்) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: