சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்
RBI/2017-18/120 ஜனவரி 11, 2018 சிறு சேமிப்புத் திட்டங்களை கையாளும் அன்புடையீர் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மேற்கூறிய தலைப்பில், அக்டோபர் 12, 2017 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை எண் DGBA.GBD.No.954/15.02.005/2017-18-ஐப் பார்க்கவும். இந்திய அரசாங்கம் டிசம்பர் 27, 2017 தேதியிட்ட தனது குறிப்பாணை எண்(OM) No.F.01/04/2016-NS-ல் 2017-2018 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை அறிவுறுத்தியது (நகல் இணைக்கப்பட்டுள்ளது). 2. இந்த சுற்றறிக்கையின் உள்ளடக்கம், சிறு சேமிப்புத் திட்டங்களை கையாளும் கிளைகளுக்கு தேவையான நடவடிகைக்களுக்காக அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவேண்டும். மேலும்,இத்திட்டங்களின் சந்தாதாரர்களின் தகவலுக்காக இதனை கிளைகளில் பார்வையில் வைக்கப்படவேண்டும். இங்ஙனம் இணைப்பு – மேலே குறிப்பிட்டபடி |