பன்னாட்டுக் கடன் அட்டைகள் வசதிகளை இந்தியாவில் வாழ்வோருக்கு தாராளமயமாக்கல் - ஆர்பிஐ - Reserve Bank of India
பன்னாட்டுக் கடன் அட்டைகள் வசதிகளை இந்தியாவில் வாழ்வோருக்கு தாராளமயமாக்கல்
பத்திரிக்கைக் குறிப்பு
|
|
பத்திரிக்கைத்தொடர்பு அலுவலகம்,
மத்திய அலுவலகம், தபால் பெட்டி எண் 406,
மும்பை – 400 001.
|
e-mail: helpprd@rbi.org.in
|
பன்னாட்டுக் கடன் அட்டைகள் வசதிகளை இந்தியாவில்
வாழ்வோருக்கு தாராளமயமாக்கல்
மே 21, 2003
பன்னாட்டுக் கடன் அட்டைகள் சார்ந்த வசதிகள் மேலும் கூடுதலாக்கும் ஒரு நடவதிக்கையாக இந்தியாவில் வாழ்வோர் அந்நியச் செலாவணி நெறிமுறைகளின் நடப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு அந்நியச் செலாவணிக் கணக்கை இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற ஒரு வணிகரிடமோ அல்லது அயல்நாட்டு வங்கிகயிலோ வைத்திருப்பின் அயல்நாட்டு வங்கிகள் அல்லது புகழ்வாய்ந்த முகமைகளிடமிருந்து பன்னாட்டுக் கடன் அட்டைகளை (பகஅ) பெற உரிமை உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டது. அட்டைகள் வழி இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏற்படும் செலவினங்களை அட்டை உடையவரின் அந்நியச் செலாவணிக் கணக்கு மூலமோ அல்லது தொகையைச் செலுத்துவதெனில் இந்தியாவில் அட்டை உடையவர் பெயரில் உள்ள நடப்பு அல்லது சேமிப்புக் கணக்கு மூலமாக செலுத்தலாம். இந்த நோக்கத்துக்காக செலுத்த வேண்டியதை அயல்நாட்டிலுள்ள அட்டை வழங்கும் முகமைக்கு நேரடியாக மட்டுமே செலுத்தலாம். மூன்றாம் நபர் ஒருவருக்குச் செலுத்த முடியாது.
ஏற்புடைய கடன் வரம்பு, அட்டை வழங்கும் வங்கிகளால் முடிவுசெய்யப்பட்டது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் கீழ் செலுத்த வேண்டியது ஏதுமிருப்பின் அதற்குப் பண அடிப்படியிலான உச்ச வரம்பு எதையும் இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை. அதன்படி தடைசெய்யப்பட்ட பொருள் வாங்கல், பரிசுச் சீட்டு போன்றவை, வெளியேற்றப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட ஏடுகள், குதிரைப் பந்தயச் சூதாட்டம், திரும்ப அழைப்புச் சேவைக் கட்டணம் போன்றவை இதில் அடங்குவன.
அல்பனா கில்லாவாலா
பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு-2002-2003/1181