RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78511873

பெருநிறுவன கடனாளிகளுக்கான சட்டப்பூர்வ அடையாளம் காட்டும் குறியீடு அறிமுகம்

அறிவிக்கை எண் 82/2017-18
DBR. No. BP. BC. 92/21.04.048/2017-18

நவம்பர் 02, 2017

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
அகில இந்திய நிதி நிறுவனங்கள்
(Exim Bank, SIDBI, NHB, NABARD)
பிராந்திய வங்கிகள்
சிறு நிதி வங்கிகள்

அன்புடையீர்

பெருநிறுவன கடனாளிகளுக்கான சட்டப்பூர்வ
அடையாளம் காட்டும் குறியீடு அறிமுகம்

உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின், நிதி தரவு முறைகளின் தரம் மற்றும் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும், சிறந்த நேரிடர் நிர்வாகத்திற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகவும், சட்டப்பூர்வ அடையாளம் காட்டும் குறியீடு (LEI) அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளாவிய நிதி பரிமாற்றங்களுக்கான நபர்களை அடையாளம் காண்பதற்கான ஓர் 20 இலக்க தனிப்பட்ட குறியீடே LEI ஆகும்.

2. ஜுன் 01, 2017-ந் தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை RBI/2016-17/314 FMRD.FMID.No.14/11.01.007/2016-17-ன்படி, OTC டெரிவேட்டிவ்கள் சந்தையில் பங்கேற்பாளர்களுக்கான LEI படிப்படியான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

3. அக்டோபர் 04, 2017 தேதியிட்ட மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த கொள்கைகளின் அறிவிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. வங்கிகளில் மொத்த நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத வகையில் (எக்போஷர் வரம்பு) ரூ. 5 கோடி வரை கடன் வாங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் LEI அமைப்பு முறை படிப்படியாக (விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது) அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, வங்கிகள் நடப்பிலிருக்கும் ரூ. 50 கோடிக்கு மொத்த எக்போஷர் உள்ள பெருநிறுவன கடனாளிகளை பின்னிணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி LEI-ஐப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தவேண்டும். LEI குறியீடு எண் பெறாத கடனாளிகள் தங்கள் கடனை புதுப்பிக்கவோ / வரம்பை உயர்த்தவோ அனுமதியளிக்கப்படக் கூடாது. ரூ. 5 கோடி முதல் ரூ. 50 கோடி வரை எக்போஷர் வரம்புடைய கடனாளிகளுக்கு இதற்கான ஒரு தனிப்பட்ட செயல்முறைத் திட்டம் நாளடைவில் வழங்கப்படும்.

4. வங்கிகளிடம் அதிக அளவில் கடன் பெற்ற கடனாளிகளின் தாய் நிறுவனம், அனைத்துத் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டாளிகள் LEI பெற அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.

5. குளோபல் லீகல் என்டிடி ஐடென்டிபைஃயர் பஃவுண்டேஷனால் (GLEIF) சான்றுரைக்கப்பட்ட உள்ளூரில் இயங்கும் அமைப்பு (LOUs) களிடமிருந்து LEI-ஐ பெறமுடியும். இந்தியாவைப் பொறுத்தவரை, CCIL-ன் துணை நிறுவனமான, லீகல் என்டிடி ஐடென்டிபைஃயர் இந்தியா லிமிடெட் (LEIIL) நிறுவனத்திடமிருந்து, LEI குறியீட்டு எண்ணைப் பெறமுடியும். பட்டுவாடா மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் LEI குறியீட்டு எண்ணை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும், GLEIF-ஆல் சான்றுரைக்கப்பட்ட உள்ளூர் செயல்பாட்டு அமைப்பாகவும் (LOUs), இந்தயாவில் LEI வழங்கல் மற்றும் மேலாண்மைக்கான அமைப்பாகவும் LEIIL விளங்குகிறது.

6. சட்டங்கள், நடைமுறை மற்றும் ஆவணத் தேவைகள் ஆகியவற்றை LEIIL-யிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

7. LEI குறியீட்டைப் பெற்ற பிறகு, GLEIF-ன் வழிகாட்டுதலின்படி கடன் வாங்கியவர்கள் குறியீட்டு எண்களை புதுப்பிப்பதை வங்கிகள் உறுதிப்படுத்திடவேண்டும்..

8. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 21 மற்றும் 35 (A)-ன் படி இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

இங்ஙனம்

(S. S. பாரிக்)
தலைமைப் பொதுமேலாளர் - பொறுப்பு


அக்டோபர் 4, 2017 தேதியிட்ட, மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகளின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்

5. சட்ட பூர்வ அடையாளங்காட்டும் குறியீடு – LEI: வங்கிகளில் மொத்த நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத வகையில் (எக்போஷர் வரம்பு) ரூ. 5 கோடி வரை கடன் வாங்கும் அனைத்து நிறுவனங்களும், LEI பெற்று பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வங்கிகளை வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் CRILC-ல் சேமித்து வைக்கப்பட வேண்டும். பெரு நிறுவனக் குழுக்களின் மொத்த கடன் தொகையை மதிப்பிடுதல், ஒரு நிறுவனம் / குழுவின் நிதியியல் நிலையை கண்காணித்தல் ஆகியவற்றிற்கு இது உதவிகரமாக இருக்கும். இதை அமலாக்கம் செய்யும் செயல்முறை படிப்படியாகவும் அதே நேரத்தில் ஒரு காலக்கெடுவுக்குள் செய்துமுடிக்கும்படியாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் அக்டோபர் 2017-க்குள் வெளியிடப்படும்.


இணைப்பு

LEI-ஐ செயல்படுத்துவதற்கான அட்டவணை

SCBs-களுக்கான மொத்த எக்ஸ்போஸர் முடிக்கப்பட வேண்டிய தேதி
ரூ. 1000 கோடி மற்றும் அதற்கு மேலும் மார்ச் 31, 2018
ரூ. 500 கோடி மற்றும் ரூ. 1000 கோடிக்கு இடையே ஜுன் 30, 2018
ரூ. 100 கோடி மற்றும் ரூ. 500 கோடிக்கு இடையே மார்ச் 31, 2019
ரூ. 50 கோடி மற்றும் 100 கோடிக்கு இடையே டிசம்பர் 31, 2019

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?