மகாத்மா காந்தி வரிசை – 2005 நோட்டுகளில் வரிசை எண்களிடையே உட்பொதிந்த “S” எழுத்துடன், ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன் ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
மகாத்மா காந்தி வரிசை – 2005 நோட்டுகளில் வரிசை எண்களிடையே உட்பொதிந்த “S” எழுத்துடன், ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன் ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு
ஜூலை 19, 2017 மகாத்மா காந்தி வரிசை – 2005 நோட்டுகளில் வரிசை எண்களிடையே இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில் நோட்டின் எண்களுக்கான இரு பகுதிகளிலும் உட்பொதிந்த “S” எழுத்துடன் ₹ 20 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள (பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1004-ஐப் பார்க்கவும்) ₹ 20 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும். இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/183 |