RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78498027

“அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150-வது நூற்றாண்டு விழா” வை நினைவு கூறும் வகையில் புதிய 5 நாணயங்கள் வெளியீடு

ஏப்ரல் 26, 2017

“அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150-வது நூற்றாண்டு விழா” வை நினைவு
கூறும் வகையில் புதிய 5 நாணயங்கள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி அரசாங்கம் தயாரித்த மேற்குறிப்பிட்ட மதிப்பிலக்க நாணயங்களை விரைவில் புழக்கத்தில் விடுகிறது.

இந்திய அரசு நிதி அமைச்சகம், பொருளாதார விவகாரத்துறை, புதுதில்லியின் பிப்ரவரி 23, 2016 தேதியிட்ட G.S.R.191 (E) எண் கொண்ட அரசிதழில் (அசாதாரண - பகுதி II பிரிவு 3, உப பிரிவு (i)) இந்த நாணயங்களின் வடிவமைப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

வடிவம்:

முன்புறம்:

நாணயத்தின் இப்பகுதியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் மேற்புறத்தில் ‘भारत’ என்று இந்தியிலும் வலப்பக்கம் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் என்ற ரூபாய் குறியீடும் மதிப்பிலக்கம் “5” என்பது சர்வதேச எண் அளவிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

பின்புறம்:

நாணயத்தின் மறுபக்கம் “புத்தகத்தில் இருந்து வரும் அலஹாபாத் உயர் நீதிமன்ற கட்டிடத்தின் மையப் பகுதி“-ஐ சித்தரிக்கும் படம் பொறிக்கப்பட்டிருக்கும். “इलाहाबाद उच्चन्यायालय का 150 वां वार्षिकोत्सव“ என்று தேவநாகரியிலும், “150th ANNIVERSARY OF ALLAHABAD HIGH COURT” என்று ஆங்கிலத்திலும் மேற்புறமும் கீழ்ப்புறமும் பொறிக்கப்பட்டிருக்கும். படத்திற்கு வலது புறமும் இடது புறமும் “1866-2016” என்று சர்வதேச எண் அளவில் எழுதப்பட்டிருக்கும்.

2011-ஆம் வருடத்திய இந்திய நாணயச் சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் செல்லத்தக்கவையே.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிகை வெளியீடு – 2016-2017/2903

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?