RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441930

அயல்நாட்டுக் குடியிருப்பு இந்தியர்/ மற்றும் இந்திய வம்சாளியினருக்கு பன்னாட்டுக் கடன் அட்டை வழங்குதல்

டிசம்பர் 09, 2002

A.P.(DIR Series) சுற்றறிக்கை எண் 59

அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வர்த்தகர் அனைவருக்கும்

அன்புடையீர்,

அயல்நாட்டுக் குடியிருப்பு இந்தியர்/ மற்றும் இந்திய வம்சாளியினருக்கு பன்னாட்டுக் கடன் அட்டை வழங்குதல்

A.P.(DIR Series) சுற்றறிக்கை எண்.53, 27 ஜுன் 2002 தேதியிடப்பட்டதில்

பன்னாட்டுக் கடன் அட்டை வழங்குதல் மற்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட A.P.(DIR Series) சுற்றறிக்கை எண்.40, 5.11.2002 தேதியிடப்பட்ட தெளிவாக்கத்தின் கருத்துக்களை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

2. பன்னாட்டுக் கடன் அட்டை உபயோகத்திற்கான கட்டணங்களை தற்போது நடைமுறையிலுள்ள உத்தரவுகளின்படி அயல்நாட்டுக் குடியிருப்பு இந்தியர் மற்றும் இந்திய வம்சாளியினர் தத்தம் அயல்நாட்டு குடியிருப்பாளர்(வெளிநாட்டு) ரூபாய் கணக்கு அல்லது அயல்நாட்டு நாணய கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை அல்லது வெளிநாடுகளிலிருந்து வரும் பண அனுப்பீடுகளை மூலமே கட்ட இயலும் மறுபரிசீலினையின் பேரில் கடன் அட்டை வைத்திருப்போரின் அயல்நாட்டுக் குடியிருப்பாளரான இந்தியரின் (சாதா) ரூபாய் கணக்கிலிருந்தும் பன்னாட்டுக் கடன் அட்டைச் செலவுகளைக் கட்டலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகவே இந்திய வங்கிகள் வெளியிட்ட பன்னாட்டுக் கடன் அட்டைகள் சார்ந்த செலவுகளை(பற்றை) வரையறுக்கப்பட்ட அளவு வரை, NRI மற்றும் PIO க்களின் NRO கணக்கிலிருந்து செலுத்த அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் அனுமதிக்கலாம். இந்தியக் குடியிருப்பாளருக்கான பன்னாட்டுக் கடன் அட்டை உபயோகம் சார்ந்த் பற்றுக்குறித்த விதிமுறைகள் இவர்களுக்கும் உரியதாகும்.

3. தத்தம் குழுவைச் சார்ந்த முகவர்கள் கவனத்திற்குக் இந்த சுற்றறிக்கையின் கருத்துக்களை எடுத்து செல்லும்படி அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. அந்நியச் செலாவணிகண்காணிப்பு (வைப்பு) விதிகள் 2000த்தில் செய்யப்பட்ட தேவையான திருத்தங்கள் தனியே தெரிவிக்கப்படும்.

5. இந்தச் சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கட்டளைகள் யாவும் FEMA 1999 (42 of 1999) ன் சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் சட்டப்பிரிவு எண் 11(1)ன் கீழ் வெளியிடப்படுகிறது.

தங்கள் உண்மையுள்ள

கிரேஸ் கோஷி
தலைமைப் பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?