ஜனா சிறு நிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது - ஆர்பிஐ - Reserve Bank of India
78498840
வெளியிடப்பட்ட தேதி மார்ச் 28, 2018
ஜனா சிறு நிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது
மார்ச் 28, 2018 ஜனா சிறு நிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது மார்ச் 28, 2018 முதல் ஜனா சிறு நிதி வங்கி லிமிடெட் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன் பொருட்டு, சிறு நிதி வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது. செப்டம்பர் 16, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி, சிறு நிதி வங்கி அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 10 விண்ணப்பதாரர்களில் ஜனலட்சுமி ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் வங்கியும் ஒன்றாகும். (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2592 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?