உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு எதிரான நடவடிக்கைகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு எதிரான நடவடிக்கைகள்
RBI / 2005-06 / 317
DNBS.PD.CC.No.64/03.10.042/2005-06 மார்ச் 7, 2006
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் NBFCs
வங்கி அல்லாத மற்ற நிறுவனங்கள் MNBCs
வங்கி அல்லாத நிறுவனங்கள் RNBC
அன்புடையீர்
உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு எதிரான நடவடிக்கைகள்
2005 பிப்ரவரி 21 தேதியிட்ட DNBS(PD)CC.48/10.42/2004-05 சுற்றறிக்கையைப் பார்க்கவும். ரிசர்வ் வங்கியின் வங்கி இயக்கம் மற்றும் வளர்ச்சித் துறை வணிக வங்கிகளுக்கு அறிவுறுத்தியது போல, அனைத்து வங்கி அல்லாத நிதி/மற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர் ஏற்புக் கொள்கையையும், அவர்கள் அறிந்து கொள்ளும் வழிமுறைகளையும் வகுக்க வேண்டும். இந்த நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை குறைந்த அளவு / சுமாரான / அதிக அளவு அபாயங்கள் உடையவர்களாக முகவரியைப் பதிவு செய்தல் போன்றவற்றையும் மேற் கொள்ள வேண்டும்.
2. 2005 பிப்ரவரி 21ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையில் வாடிக்கையாளரையும் அவர் தம் இருப்பிடத்தையும் அறிந் து கொள்ளும் வகையில் படிவங்கள் இணைக்கப்பட்டிருந் தாலும், சிலர் குறிப்பாக கிராமப்புற ந கர்புற ஏழை மக்கள் தங்களையும் தங்கள் இருப்பிடங்களுக்குமான சான்றிதழ்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். தங்களுடைய எல்லாச் சேமிப்பு கணக்குகளிலுமாக ரூ. 50,000/- க்கு மிகாமலும் கடன் கணக்குகளில் ரூ.1,00,000/- க்கு மிகாமலும் ஆண்டு ஓன்றுக்கு நிலுவைத் தொகை வைத்திருக்க விரும்பும் வாடிக்கையாளர்களுகு, அவர்களைப் பற்றியும் அவர்களது முகவரி பற்றியுமான சான்றிதழ் கொடுக்கும் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
3. 2005 பிப்ரவரி 21 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை இணைப்பு II இல் கூறியுள்ளது போல், இத்தகைய நிறுவனங்கள் பாரா 2 இல் மேலே உள்ளது போல் கணக்குத்தரலாம். ஆனால் அப்படிப்பட்ட சான்றிதழ்கள் இல்லாமல் வாடிக்கையாளரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக்குப்பட்டு கணக்கு துவக்க அனுமதிக்கலாம்.
(a) வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் வழிமுறைகளை முழுவதுமாகக் கடைபிடித்த வாடிக்கையாளர் ஓருவரிடமிருந்து அறிமுகக் கடிதம் ஓன்றைத்பெற்றுவர வேண்டும். அறிமுகக் கடிதம் தரும் வாடிக்கையாளர் குறைந்தது ஆறுமாத திருப்திகரமான கணக்கு வைத்திருக்கவேண்டும். அறிமுகம் அளிப்பவர், புதிதாகக் கணக்குத் துலக்குபவரின் புகைப்படத்தையும் முகவரியையும் சான்றளிக்க வேண்டும்.
(b) நிறுவனம் திருப்திபடுகின்ற வகையில் வேறு ஏதேனும் சான்றுகள் இருந்தாலும் அளிக்கலாம். நபரையும் அவர் உறைவிடத்தையும் உறுதிப்படுத்தும் எந்தச் சான்றிதழ்களையும் ஏற்றுக்கொள்ளலாம்.
4. இதுபோல சான்றிதழ்கள் இல்லாமல், அறிமுகக் கடிததுடன் துவங்கப்படும் கணக்கு சேமிப்புக் கணக்காளாய் ஆண்டு ஓன்றுக்கு ரூ. 1,00,000/- க்கு மிகாமலும் இருக்கவேண்டும். இந்த வரம்புக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்திட வேண்டும். சேமிப்புக் கணக்கில் ரூ. 40,000/- அல்லது கடன் கணக்கில் ரூ.80,000/- நிலுவைத்தொகை வரும் போதே, வரம்பு விபரங்களையும் வரம்பைத் தாண்டி பரிவர்த்தனை ஏற்க இயலாது என்பதையும் வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்திட வேண்டும்.
5. நிறுவனங்கள் தங்கள் கிளைக்கு இது சம்பந்தமான தேவையான அறிவுறைகளை வழங்கிட வேண்டும்.
நம்பிக்கையுள்ள
பி. கிருஷ்ணமூர்த்தி
தலைமைப் பொது மேலாளர் பொறுப்பு