RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441198

வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர்களிடமிருந்து கடன்கள் வாங்குவதில் விதிகள் தளர்வு

இந்தியாவில் குடியிருப்போரின் அந்நியச் செலாவணி நடவடிக்கைகள் பற்றி இப்போதுள்ள சட்டங்களிலும் விதிமுறைகளிலும் தளர்வு செய்யும் வகையிலும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாங்கும் கடனுக்கு வட்டியில்லாமலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பிச் செலுத்த வேண்டாத நிலையிலும் இருப்பின், வெளிநாட்டிலுள்ள தங்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து அமெரிக்க டாலர் 250,000 வரை கடன் பெறுவதற்கு இப்போதுள்ள விதிமுறைகள் பொது அனுமதி வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியால் பெறப்பட்ட வேண்டுகோளின்படி அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குரிய காலத்தினை ஓராண்டாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் குடியிருப்போர் வெளிநாட்டில் உள்ள தங்கள் நெருங்கிய உறவினர்களிடமிருந்து 250,000 அமெரிக்க டாலர்வரை வட்டியில்லாமலும் ஓராண்டுக்குப் பின்னர் திருப்பிச் செலுத்தும் வகையிலும் கடனாகப் பெறமுடியும்.

அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் (FEMA) 1999இன்படி இப்போதுள்ள சட்டங்கள்/விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப் படும்வரை ரிசர்வ் வங்கியின் வட்டார அலுவலகங்கள், இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்கும்.

அல்பனா கில்லாவாலா

பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு-2002-2003/266

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?