RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78441985

மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டுப் பயணம் அந்நியச் செலாவணி வழங்குதலில் தாராளமயம்
A.P. (DIR Series Circular No 17)(September 12, 2002)

பாரத ரிசர்வ் வங்கி
அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுத்துறை
மைய அலுவலகம்
மும்பை 400 023

செப்டம்பர் 17, 2002

 

A.P. (DIR Series) சுற்றறிக்கை எண் 17

அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வணிகர்கள் அனைவருக்கும்

அன்புடையீர்,

மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டுப் பயணம் அந்நியச் செலாவணி வழங்குதலில் தாராளமயம்

வெளிநாட்டிலுள்ள மருத்துவர் அல்லது இந்தியாவிலுள்ள மருத்துவர் அல்லது மருத்துவமனையின் மதிப்பீட்டின்படி இந்தியக் குடியிருப்பாளர் ஒருவருக்குத் தனது மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை வழங்கிடும் அதிகாரம் G.S.R.381(E) 3 மே 2000 தேதியிட்ட அட்டவணை III ல் குறிப்பெண் 9ன் படி அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதனை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

2. மருத்துவச் சிகிச்சைக்கான செலவுத்தொகையை இந்தியக் குடியிருப்பாளர் அந்நியச் செலாவணியில் பெறுவதில் காலவிரயம், இடர்பாடுகள் தவிர்க்கும் பொருட்டு அமெரிக்க டாலர் 50000 அல்லது அதன் மதிப்புள்ள தொகை வரை மருத்துவரின் மதிப்பீடு இன்றியே அங்கீகரிக்கப்பட்டவணிகர்கள் வழங்கிடலாம் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.

3. மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டில் செய்யப்படும் செலவுக்கான தொகையை, அயல்நாட்டு நாணயத்தில் பெறத் தேவையான தொகையை காசோலையாகவோ, கேட்பு வரையோலையாகவோ தன் கணக்கில் பெறும்படி செய்து அந்தப் பணம் மருத்துவச் சிகிச்சைக்காகவே செலவழிக்கப்படுகிறது என்கிற விண்ணப்பதாரின் உறுதிமொழியின்பேரில் அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள், 2000 அமெரிக்க டாலர் வரை அயல்நாட்டு நாணயத்தை வழங்கலாம்.

4. அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இந்த சுற்றறிக்கையின் கருத்துக்களைத் தத்தம் குழுவைச் சார்ந்த முகவர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்வாராக.

5. இந்தச் சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கட்டளைகள் யாவும் FEMA 1999 (42 of 1999) ன் சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் சட்டப்பிரிவு எண் 11(1)ன் கீழ் வெளியிடப்படுகிறது.

தங்கள் உண்மையுள்ள

 

கிரேஸ் கோஷி
தலைமைப் பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?