தாராளமாக்கப்பட்ட செலுத்தும் திட்டம் - அமெரிக்க டாலர் 25000 - இந்தியாவில் வாழும் தனி நபர்களுக்காக - ஆர்பிஐ - Reserve Bank of India
தாராளமாக்கப்பட்ட செலுத்தும் திட்டம் - அமெரிக்க டாலர் 25000 - இந்தியாவில் வாழும் தனி நபர்களுக்காக
பத்திரிக்கைக்
குறிப்பு
|
|
பத்திரிக்கைத்தொடர்பு
அலுவலகம், மத்திய
அலுவலகம், தபால்
பெட்டி எண் 406, மும்பை – 400 001. |
e-mail: helpprd@rbi.org.in |
பிப்ரவரி
4, 2004
தாராளமாக்கப்பட்ட
செலுத்தும்
திட்டம் அமெரிக்க
டாலர் 25000
இந்தியாவில்
வழும் தனி
நபர்களுக்காக
மேலும்
தாராளமாக்கப்படவேண்டும்
என்பதற்கான
நடவடிக்கையாக,
பரிமாற்றம்,
நடப்புக் கணக்கு
அல்லது
முதலீட்டுக்
கணக்கு என
வேறுபடுத்தப்படாமல்
குடியிருப்போர்
ஒரு
நாள்காட்டி
ஆண்டில் எந்த
நோக்கத்திற்காகவும்
அமெரிக்க
டாலர் 25000 வரை
வங்கியில்
செலுத்தும்
அனுமதியை
வழங்க இத்திட்டத்தை
இந்திய
ரிசர்வ்
வங்கி தொடங்கியுள்ளது.
எல்லா
குடியிருப்போர்
தனிநபர்தளும்
இத்திட்டத்தின்
கீழ் இவ்
வசதியைப்
பயன்படுத்திக்
கொள்ளலாம். இந்த
வசதி ஒரு
நாள்காட்டி
ஆண்டில்
அமெரிக்க
டாலர் 25000 வரை
எந்த
நடப்புக்
கணக்கிலும்
அல்லது முதலீட்டுக்
கணக்கிலும்
அல்லது
இவ்விரண்டிலும்
சேர்த்து
தொகையை
வங்கியில்
செலுத்த வகை செய்திறது. இந்த
வசதியின்
கீழ் இந்திய
ரிசர்வ்
வங்கியின்
அனுமையின்றியே
இந்தியாவில்
வாழும்
தனிநவர்கள்
இந்தியாவிற்கு
வெளியே
எத்தகைய
அசையா
சொத்துக்கள்
அல்லது
பங்குப்பத்திரங்கள்
அல்லது
இன்னபிற
சொத்துக்களை
வாங்கவும்
வைத்துக் கொள்ளயும்
உரிமையுடையவர்கள். இந்திய
ரிசர்வ்
வங்கியின்
முன்கூட்டிய
அனுமதி பெறாமலேயே
இத்திட்டத்தின்
கீழ் தனிநவர்கள்
பணம்
செலுத்துவதற்காக
இந்தியாவிற்கு
வெளியே ஒரு
வங்கியில்
அயல்நாட்டுச்
செலாவணிக்
கணக்கைத்
தொடங்கவும்
பராமரிக்கவும்
வசதி
அளிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட
பணம்
செலுத்தல்
தொடர்பாக
எல்லா வகையான
பரிமாற்றங்களையும்
இத்திட்டத்தின்
கீழ்
நடைமுறைப்படுத்த
அந்நியப்
பணக் கணக்கைப்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
ஏற்கனவே
அனுமதிக்கப்பட்ட
செலவின்ங்களான
தனிப்பட்ட
பயணம்,
வணிகமுறைப்
பயணம் பரிசுக்குப்
பணம்
செலுத்தல்,
வெகுமதிகள்,
கல்விச்
செலவு,
மருத்துவச்
செலவு
போன்றவைகளைத்
தவிர
இத்திட்டத்தின்
கீழ்
இக்கூடுதல்
வசதியும்
கொடுக்கப்படுகிறது. எனினும்
இந்தச்
சலுகையைப்
பயன்படுத்தி
நடப்புக்
கணக்கில் FEMA வின்
கீழ் தடை
செய்யப்பட்ட
அல்லது
விலக்கப்பட்ட
கொள்முதல்களான
பரிசுச்
சீட்டு, குதிரைப்
பந்தயத்தில்
பணம்
கட்டுதல்,
சட்டத்தால்
தடைசெய்யப்பட்ட
இதழ்கள்
வாங்குதல்
போன்ற செயல்களில்
பணம்
செலுத்தக்கூடாது. பூட்டான்,
நேபாளம்,
மெளரிசியஸ்
அல்லது
பாகிஸ்தான்
மற்றும் நிதி
நடவடிக்கை
சிறப்புக்
கடமைப்படை (FATF) யால்
ஓத்துழைப்பு
நல்கா
நாடுகள்
அல்லது பகுதிகள்
எனக்
குறிப்பிடப்படும்
நாடுகள்
அல்லது இந்திய
ரிசர்வ்
வங்கியால்
மிகத்தீங்கான
நனிநபர்கள்
மற்றும்
அமைப்புகள்
என குறிப்பிடப்பட்டவர்களுக்கும்
நேரடியாகவோ
மறை முறைமாகவோ
பணம்
செலுத்தக்
கூடாது.
விண்ணப்பிப்போர்
தங்களது
நிரந்தரக்
கணக்கு எண்ணை (PAN) க்குறிப்பிட்டு
அங்கீகரிக்கப்பட்ட
வணிகரிடம் (AD) வங்கிக்கு
செலுத்தப்படும்
தொகை
அவர்களுடையதுதான்
என்பதைச்
சான்றளித்து
உறுதிப்படுத்த
வேண்டும்.
அவர்கள்
அறிவுப்பூர்வ
ஊக்கத்தோடு ‘உங்கள்
வாடிக்கையாளரை
அறிந்து
கொள்ளவும்’ (KYC)
என்பதற்கான
வழிமுறைகளையும்
ஆய்ந்து தெளிந்து
இந்தச் சலுகையை
அளிக்க
வேண்டும்.
இத்திட்டம்
உடனடியாக
நடைமுறைக்கு
வருகிறது.
அஜித்
பிரசாத்
மேலாளர்
செய்தி
வெளியீடு 2003-2004/942