500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – பணமாக எடுக்க வரம்புகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – பணமாக எடுக்க வரம்புகள்
RBI/2016-17/123 நவம்பர் 10, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – பணமாக எடுக்க வரம்புகள் நவம்பர் 08, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். 2. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையின் பாரா 3 c (iv)-ன்படி, அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து நவம்பர் 24, 2016 (வேலைநேரம் முடியும் வரை) வரையுள்ள காலகட்டத்தில் மட்டும் பணமாகக் கணக்கிலிருந்து எடுப்பதற்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 10,000 வரை ஒட்டு மொத்தமாக ஒரு வாரத்திற்கு ரூ. 20,000 வரை மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து ஒருவர் வங்கி முகப்பில் எடுக்கமுடியும். இது பின்னர் மறு ஆய்வு செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் பின்வரும் நிகழ்வுகளுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது.
3. பணக்கருவூலங்கள், தங்கள் பகுதியில் உள்ள இதர வங்கிக் கிளைகள் (அதனுடன் இணைக்கப்பட்டிராவிடினும்) வேண்டும் கோரிக்கைகளுக்கிணங்கி, உதவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றன. 4. CTR/STR அறிக்கை நிபந்தனைகளுக்குட்பட்டு, எல்லா வகையான கடன் / டெபாசிட் கணக்குகளிலும் குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள் செலுத்தப்படலாம். இங்ஙனம் (P. விஜயகுமார்) |