அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுத்துறை
A.P. (DIR
Series) சுற்றறிக்கை எண்.1 (ஜுன் 1, 2000)
அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுத்துறை
மைய அலுவலகம்
மும்பை 400 023
ஜுன் 1, 2000
A.P.(DIR Series) சுற்றறிக்கை எண்
1
A.P. (FL Series) சுற்றறிக்கை எண்
1
அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வர்த்தகர் அனைவருக்கும்
முழுமைபெற்ற பண மாற்றாளர்கள் கவனத்திற்கு: 16.5.2000 தேதியிடப்பட்ட சுற்றறிக்கை எண்.11 ல் பாரா.4(AD(MA) Series
குறிப்பிடப்பட்ட கட்டளைகள் தேவைப்படும் மாறுதல்களுடன் பண மாற்றாளர்களுக்கு பொருந்தக்கூடியதாகும். அவ்வப்போது திருத்தப் படும் FLM/RLM ல் கூறப்படும் சட்டநிபந்தனைகளால் பண மாற்றாளர்கள் தொடர்ந்து ஆளப்படுவர். அந்நியச் செலாவணி கண்காணிப்புச்சட்டம் 1999 ன் கருத்துப்படி, நடப்பு விதிமுறைகள் கீழ்க்கண்ட மாற்றங்கள் பெற்றுத் திகழ்கிறது.
1.
அங்கீகரிக்கப்பட்ட தேவைகளுக்காக அனுமதிக்கப்படும் அந்நியச் செலாவணி வெளியீட்டின் அளவு
a. ஓராண்டில் ஒரு நபருக்கான ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சொந்த காரணங்களுக்காக அயல்நாடடு பயணச்செலவுக்கான தொகை தற்போதைய BTQ (FLM ன் பாரா 10ல்) குறிப்பிட்ட தொகைக்கு மாறாக அமெரிக்க டாலர் 5000 அல்லது அதன் மதிப்புள்ள தொகையை விஞ்சக் கூடாது.
a.
b. வணிகம் சார்ந்த பயணத்திற்கான ஒரு நபரின் அயல்நாடடு பயணச்செலவு, தங்கும் காலம் குறித்த கணக்கு ஏதுமின்றி மொத்தமாக, தற்போதைய வெவ்வேறு தளங்களில் தரப்படும் அந்நியச் செலாவணி அளவைகளில் (FLM ன் பாரா 11ல் குறித்தபடி யாவுக்கும் மாறாக 25000 அமெரிக்க டாலர்மதிப்பினை விஞ்சக் கூடாது.
b.
2. ஆவணச்சான்று வழக்காட்சி
அந்நியச் செலாவணியை உபயோகித்திற்காக பணமாற்றாளர்கள் வெளியிடு,ம் வேளையில் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் எதையும் இனிமேல் ரிசர்வ் வங்கி வகுத்துரைக்காது. இது தொடர்பாக அ.செ.க. சட்டம் 1999 (1999ன் 42ல்) சட்டப்பிரிவு 10ல் உட்பிரிவு 5ல் சொல்லப்படும் கருத்துக்களை பணமாற்றாளர்கள் கவனத்தில் கொள்வாராக. அதிகாரம் பெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகர் அந்நியச் செலாவணிக்கான வணிக நடவடிக்கையை ஒருவர் சார்பாக செயல்படுத்தும் முன் கவனத்தில் கொள்ளத்தக்கவை; அந்த நபர் அவ்வணிக நடவடிக்கையால் அ.செ.க. சட்டத்தில் குறிப்பிட்ட வரைமுறைகள், விதிகள், அறிவிப்பு மற்றும் ஷரத்துக்களுக்குப் புறம்பாககவோ அல்லது மீறும் நோக்கத்துடனோ செயல்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளும்பொருட்டு அவரிடமிருந்து ஒரு உறுதி ஆவணமும் தேவைப்படும் விவரங்களும் வேண்டிப்பெற்றுத் தன் ஐயத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். வணிக நடவடிக்கையின்போது பணமாற்றாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வேண்டிப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவு செய்து வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை பின்னர் ரிசர்வ் வங்கி அந்த வணிக நடவடிக்கைக்கான ஆதாரமாக இதைச் சரிபார்க்க உதவும். வணிக நடவடிக்கைக்கான விண்ணப்பதாரர் எவரேனும் இந்த தகவல் அல்லது ஆவணம் தரமறுத்தால் போதியளவில் அது திருப்தி அளிக்காவிட்டால் அதிகாரம் பெற்ற அ.செ. வர்த்தகர் அந்த விண்ணப்பதாரர் எழுத்து வடிவில் தனது மறுப்பினை எடுத்துக்காட்டி நிராகரிக்கலாம். சட்டத்திற்கு புறம்பான அத்துமீறலான அந்த நபர் செய்ய முனைவது தெரியவந்தால் அதை அ.செ. வர்த்தகர் ரிசர்வ் வங்கியிடம் புகார் செய்யலாம்.
3. முழுநேர அந்நியச் செலாவணி பணமாற்றாளர்கள் FLMல் உள்ள சட்ட ஆணைகளின்படி தொடர்ந்து நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4. FLM உள்ள திருத்தப்படிவம் தனியாக வெளியிபப்படும் இடைப்பட்ட நேரத்தில், அ.செ. வர்த்தகர் யாவரும் இந்த சுற்றறிக்கையின் கருத்துக்களை தத்தம் குழு முகவர்களிடம் கவனத்திற்கு கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. இந்த சுற்றறிக்கையில் காணப்படும் கட்டளைகள் யாவும் ச.பி.10(4) மற்றும் ச.பி.11(1) ; அ.செ.க.ச.1999 (1999 ல் 42) படி வெளியிடப்படுகின்றன. இவற்றைக் கடைப்பிடிக்காமலிருத்தல் மற்றும் அவற்றை மீறுதல், இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்ட தண்டனைத் தொகை செலுத்தும் நிலைக்கு ஒருவரை உரியதாக்கும்.
தங்கள் உண்மையுள்ள
B. மஹேஸ்வரன்
தலைமைப் பொது மேலாளர்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: