செலுத்துகை வங்கிகளில் வாடிக்கையாளர் கணக்குகளில் நிலுவைத் தொகையின் வரம்புகள் – மற்ற வங்கிகளுடன் நிதிமாற்ற ஏற்பாடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
செலுத்துகை வங்கிகளில் வாடிக்கையாளர் கணக்குகளில் நிலுவைத் தொகையின் வரம்புகள் – மற்ற வங்கிகளுடன் நிதிமாற்ற ஏற்பாடுகள்
அறிவிப்பு எண் 329 ஜுன் 29, 2017 செலுத்துகை வங்கிகளின் அன்புடையீர் செலுத்துகை வங்கிகளில் வாடிக்கையாளர் கணக்குகளில் அக்டோபர் 06, 2016 தேதியிட்ட செலுத்துகை வங்கிகளின் செயல்பாட்டுக்கான வழிகாட்டுதல்களின் (இயக்க வழிகாட்டுதல்கள்) பாரா 7(i)–ஐப் பார்க்கவும். அதன்படி செலுத்துகை வங்கிகள் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் / சிறிய நிதி வங்கிகளுடன் ஒரு ஏற்பாடு செய்துகொண்டு, தங்கள் வங்கிகளில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட அதிகமான பணம் இருந்தால், அந்தப்பணத்தை வாடிக்கையாளருக்கு ஏற்பாட்டு வங்கியில் ஒரு கணக்கு தொடங்கி அதில் சேர்க்கவேண்டும். 2. செலுத்துகை வங்கிகளின் கருத்துகள் / திட்டங்கள் அடிப்படையிலும், அதன் “அனைவருக்கும் வங்கி சேவை / நிதியியல் சேர்க்கை“ நோக்கத்தையும் கருத்தில்கொண்டும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
3. இந்த அறிவுறுத்தல்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாட்டு வழிகாட்டுதல்களுடன் சேர்க்கப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இங்ஙனம் (சௌரவ் சின்ஹா) |