விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) – தளர்வுகளின் நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) – தளர்வுகளின் நீட்டிப்பு
செப்டெம்பர் 28, 2020 விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) – தளர்வுகளின் நீட்டிப்பு மார்ச் 27, 2020 அன்று, வங்கிகள் விளிம்பு நிலை வசதியின் கீழ் உள்ள நிதியை, சட்டரீதியான பணப்புழக்க விகிதத்தில் (எஸ்.எல்.ஆர்) இருந்து விலகி நிகர தேவை மற்றும் கால பொறுப்புகளில் (என்.டி.டி. எல்) கூடுதலாக ஒரு சதவீதம் வரை, அதாவது மொத்தமாக என்.டி.டி. எல்-இல் 3 சதவீதம் வரை, எடுக்க அனுமதிக்கப்பட்டன. இந்த ஏற்பாடு முதலில் ஜூன் 30, 2020 வரை கிடைக்கப்பெற்ற நிலையில், கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள இடையூறுகளின் காரணமாக, ஜூன் 26, 2020 அன்று செப்டெம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தப் பட்டுவாடா, ரூ. 1.49 லட்சம் கோடி வரை நிதிகளுக்கான அணுகலை அதிகரிப்பதுடன் பணப்புழக்க பாதுகாப்பு விகிதத்திற்கான உயர் தர திரவ சொத்துக்களாகவும் தகுதிப் பெறுகிறது. வங்கிகளுக்குப் பணப்புழக்க தேவைகளை வழங்குவதுடன் வங்கிகள் எல்சிஆர் தேவைகளையும் தொடர்ந்து பூர்த்தி செய்யும் பொருட்டு, எம்.எஸ்.எஃப் தளர்வுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது மார்ச் 31, 2021 வரை தொடர்ந்து நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/401 |