RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78508588

முதன்மை சுற்றறிக்கை – ஆதிதிராவிடர்கள் மற்றும்
பழங்குடியினருக்கு கடன் வசதிகள்

அறிவிப்பு எண்/2017-18/07
FIDD.CO.GSSD.BC.No.06/09.09.001/2017-18

ஜூலை 01, 2017

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்

அன்புடையீர்

முதன்மை சுற்றறிக்கை – ஆதிதிராவிடர்கள் மற்றும்
பழங்குடியினருக்கு கடன் வசதிகள்

ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்குக் கடன் வசதிகளை வழங்குவது குறித்து வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூலை 01, 2016 தேதியிட்ட முதன்மைச் சுற்றறிக்கை எண் FIDD.CO.GSSD.BC.03/09.09.001/2016-17-ன் வழிகாட்டுதல்கள் / அறிவுறுத்தல்கள் / வழிகாட்டு உத்தரவுகளைப் பார்க்கவும். ஜூன் 30, 2017ல் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், முதன்மைச் சுற்றறிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது. இச்சுற்றறிக்கையை www.rbi.org.in என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் வலைத் தளத்தில் காணலாம்.

இத்துடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைச் சுற்றறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(அஜய் குமார் மிஸ்ரா)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே குறிப்பட்டபடி


இணைப்பு

முதன்மைச் சுற்றறிக்கை – ஆதிதிராவிடர்கள் மற்றும்
பழங்குடியினருக்கு கடன் வசதிகள்

வங்கிகள் ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்குக் கடன் வசதிகளை அதிகரிக்கப் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

1. திட்டத்தின் செயல்முறை

1.1 முன்னோடி வங்கி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்கள், இந்த விஷயத்தில் வங்கிகள் மற்றும் மேம்பாட்டு முகமைகளுக்கிடையே ஒருங்கிணைப்புக்கான முக்கிய வழிமுறையாக தொடர்ந்து அமைந்திடவேண்டும்.

1.2 முன்னோடி வங்கிகளால் வகுக்கப்பட்ட மாவட்ட கடன் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுடன் கடனை இணைப்பதை முறைப்படுத்த வேண்டும்.

1.3 சுய வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக, வெவ்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையங்களுடன் வங்கிகள் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுவது அவசியமாகும்.

1.4 தொகுதி அளவில், திட்டத்தை செயல்முறைப்படுத்துவதில், ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அதன்படி, அவர்களுக்கு சாதகமான முறையில் கடன் திட்டத்தை வடிவமைத்து அதிகஅளவில் பங்கேற்று சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக் கடன் பெறும் வகையில் வங்கிகள் மூலமாக செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்த சமூகத்தினர் அளிக்கும் கடன் உதவிக்கான திட்டங்களை வங்கிகள் மிகுந்த கருணையுடன் புரிந்து கொண்டு பரிசீலித்தல் அவசியமாகும்.

1.5 வங்கிகள் கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து உரிய காலத்தில், போதுமான அளவில், உற்பத்திக்கு ஏற்றவாறு மற்றும் அதிக வருவாயை உருவாக்கும் வகையில் கடன் உதவி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்.

1.6 கடன் வழங்குவதற்காக கிராமங்களைத் தத்தெடுக்கும்போது, அங்கு வசிக்கும் இச்சமூகத்தினரின் கணிசமான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குடியிருப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட கிராமத்தைத் தேர்ந்தெடுக்க முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

2. வங்கிகளின் பங்கு

2.1 வங்கி ஊழியர்கள், வறுமை நிலையிலுள்ள வாடிக்கையாளர்கள் குறித்த காலக்கெடுவிற்குள் கடனுதவியைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், விண்ணப்ப படிவங்களைப் பூர்த்திசெய்யவும் மற்ற நடமுறைகளையும் முடித்துக்கொடுக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

2.2 கடன் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினக் கடனாளிகளை ஊக்குவிக்க, வங்கிகளால் வகுக்கப்படும் பல்வேறு திட்டங்களைப் பற்றி அவர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இவர்களில் கடன் வாங்க தகுதியுடைய பெரும்பான்மையினர் படிப்பறிவற்றவர்களாக இருப்பதால், பிரசுரங்கள், இன்னபிற வழிகளில் விளம்பரப்படுத்துவது இவர்களைக் குறைவான அளவிலேயே சென்றடையும். வங்கியின் பணியாளர்கள் தாமாகவே வசதியற்றவர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு வங்கி வழங்கும் கடன் வசதிகளைப்பற்றி விளக்கிக் கூறுவதுடன், கடன் பெறுவதனால் அவர்களுக்கு ஏற்படும் பலன்பற்றியும் எடுத்துரைக்கலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினப் பயனாளர்களுக்கு தங்கள் கடன் தேவைகளை புரிந்து கொள்ளவும் மற்றும் கடன் திட்டத்தில் அவர்களை இணைத்துக்கொள்ளவும், அடிக்கடி கூட்டங்களைக் கூட்டி, அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று, வங்கிகள் அதன் கிளைகளுக்கு அறிவுறுத்தவேண்டும்.

2.3 இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அலுவலகங்களில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளைப் பின்பற்றும் பொருட்டு அவை வங்கி ஊழியர்களிடையே பரவலாக்கப்பட வேண்டும்.

2.4 அரசாங்கம் அறிவிக்கும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் / சுய-வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடன் வசதிகேட்டு விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடம் வங்கிகள் வைப்புகளை வலியுறுத்தக்கூடாது. மேலும் கடன்களைப் பயனாளிகளுக்கு வழங்கும்போது, மானியத்தொகையை, முழுவதுமாகக் கடனைத் திரும்பப் பெறும் காலம் வரையிலும் வங்கிகள் நிறுத்திவைக்கக்கூடாது. முதலிலேயே மானியத் தொகையை கொடுக்காமல் விடுவது என்பது குறைவான அளவில் கடனளிப்பதற்கு நிகராகும். அது சொத்துகள் / வருமான உருவாக்கத்திற்குத் தடையாக இருக்கும்.

2.5 சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ், “தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கூட்டுஸ்தாபனம்”, “தேசிய ஆதிதிராவிடர் நிதி மற்றும் அபிவிருத்தி கூட்டுஸ்தாபனம்” ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்தாபனங்கள் விரும்பிய குறிக்கோள்களை அடைவதற்கு உரிய நிறுவன ரீதியான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு, வங்கிகள் தங்களின் கிளைகள் / கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

2.6 ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் அரசு ஆதரவு நிறுவனங்களுக்கு அவற்றின் பயனாளிகளுக்கு (கைவினைஞர்கள், கிராமம் மற்றும் குடிசைத் தொழில் செய்வோர்கள்) மூலப் பொருட்கள் கொள்முதல் மற்றும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதற்கான குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்படும் கடன்கள் முன்னுரிமைப் பிரிவுக் கடன்களாகக் கருதப்பட வேண்டும். ஆனால் இந்தக் கடன்கள், இந்த நிறுவனங்களின் பயனாளிகளுக்கு மூலப் பொருட்கள் கொள்முதல் மற்றும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் போன்ற நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பது உறுதிசெய்யப்படவேண்டும்.

2.7 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அளிக்கும் கடன் விண்ணப்பங்கள் கிளை மட்டத்திலேயே நிராகரிக்கப்படாமல் அடுத்த உயர் மட்டத்தில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.

3. ஆதி திராவிடர் / பழங்குடியினர் வளர்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பு

வங்கியிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு ஏற்ற வங்கி சார் திட்டங்களை ஆதி திராவிடர்/ பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனங்கள் கவனத்திலெடுத்துக் கையாளலாம் என்று இந்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. கடன்களுக்குத் தேவையான இணைப் பிணையம் / மூன்றாம் நபர் உத்தரவாதம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, முன்னுரிமைப் பிரிவு கடன் வழங்குதல் குறித்து வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களே பொருந்தும்.

4. முக்கிய மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பயனாளிகளுக்கான ஒதுக்கீடு

பல்வேறு வகையான மத்திய நிதியுதவித் திட்டங்களின் கீழ் வங்கிகளால் கடனுதவி அளிக்கப்படுகிறது. அரசாங்க முகமைகள் மூலம் மானியம் பெறப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் கடன் வழங்குதல், இந்திய ரிசர்வ் வங்கியால் மேற்பார்வை செய்யப்படுகிறது. இவ்வகையிலான ஒவ்வொரு திட்டங்களிலும் இச்சமூகத்தினைச் சார்ந்த உறுப்பினர்களுக்குக் குறிப்பிடத்தக்க இட ஒதுக்கீடு அளிக்கப்படலாம் அல்லது விதிகள் தளர்த்தப்படலாம்.

i. தீனதயாள் அந்த்யோதயா யோஜனா –தேசீய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம்

மத்திய அரசின் கிராமப்புற அபிவிருத்தி அமைச்சகம், ஏப்ரல் 01, 2013-லிருந்து முன்னர் நடப்பிலிருந்த சுவர்ணஜெயந்தி கிராம் ஸ்வரோஸ்கார் யோஜனா திட்டத்தை புதுப்பித்து தீனதயாள் அந்த்யோதயா யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. DRY-NRLM திட்டங்கள் சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குப் போதுமான அளவிற்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், 50 சதவிகித பயனாளிகள் ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடிப் பிரிவினர்களாக இருப்பதை உறுதிசெய்கிறது. DRY-NRLM திட்டத்தைப் பற்றிய விவரங்களை ஜூலை 01, 2017 தேதியிட்ட முதன்மைச் சுற்றறிக்கை எண் FIDD.GSSD.CO.BC.04/09.01.01/2017-18-ல் காணலாம்.

ii. தீனதயாள் அந்த்யோதயா யோஜனா –தேசீய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம்

மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செப்டம்பர் 24, 2013 தேதியிலிருந்து முன்னர் நடப்பிலிருந்த சுவர்ண ஜெயந்தி சஹகாரி ரோஸ்கார் யோஜனா (SJSRY) திட்டத்தை மறுசீரமைப்பதின் மூலம் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் உள்ளூரில் வசிக்கும் மக்கள் தொகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ள அளவினைப் பொறுத்து அவர்களுக்குக் கடனுதவி வழங்கப்படும். DRY-NRLM திட்டத்தைப் பற்றிய விவரங்களை ஜூலை 01, 2017 தேதியிட்ட முதன்மைச் சுற்றறிக்கை எண் FIDD.GSSD.CO.BC.03/09.16.03/2017-18-ல் காணலாம்.

iii. சலுகை வட்டிவிகிதத் திட்டம் – டிஆர்ஐ (Differential Rate of Interest Scheme-DRI)

டிஆர்ஐ திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 4 சதவிகித சலுகை வட்டியில் வங்கிகள் மூலம் இச்சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு ரூ. 15,000/ - வரை உற்பத்தித் திறனுடைய ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுவதற்காக் கடன் அளிக்கப்படுகிறது. வங்கிகள், டி.ஆர்.ஐ. திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நன்மையளிக்கும் வகையில், மொத்த டிஆர்ஐ கடன்களில் ஐந்தில் இரண்டு பங்கு (40% அளவிற்குக் குறையாமல்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகையைச் சார்ந்த தகுதிவாய்ந்த கடனாளிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், டி.ஆர்.ஐ திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு தகுதியாக கடனாளி கையகம் வைத்திருக்கவேண்டிய நிலத்தின் அளவு 1 ஏக்கர் பாசன நிலம் அல்லது 2.5 ஏக்கர் பாசனமற்ற நிலம் என்கின்ற மதிப்பீடுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருந்தாது. இத்திட்டத்தின் வருமானத் தகுதி அளவை பூர்த்தி செய்யும் எஸ்.சி. / எஸ்.டி. உறுப்பினர்கள், தனிநபர் கடனான ரூ.15,000க்கும் மேல் அதிகமாக ரூ. 20,000 / - வரை வீட்டுவசதிக் கடன் பெறலாம்.

5. கண்காணிப்பு மற்றும் மறு ஆய்வு

5.1 வங்கிகளின் தலைமை அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படும் கடன் விவரங்களைக் கண்காணிக்க ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதைத் தவிர, இந்த சிறப்புப் பிரிவு, வங்கியின் மற்ற கிளைகளிலிருந்து பெறப்பட்ட தகவல் தொகுப்புகளையும் / தகவல்களையும் சேகரிப்பதற்கும், அவற்றை ஒருங்கிணைத்து தேவையான அறிவிக்கையை இந்திய ரிசர்வ் வங்கிக்கும், அரசாங்கத்திற்கும் சமர்ப்பிக்க பொறுப்பெடுத்துக்கொள்கிறது.

5.2 மாநில அளவிலான வங்கிகள் குழு(State Level Bankers Committee-SLBC)வை முன் நின்று நடத்தும் வங்கியானது, ஆதி திராவிடர் / பழங்குடியினர் தேசீய ஆணையத்தின் பிரதிநிதியை மேற்கண்ட SLBC கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும். மேலும், “தேசிய ஆதி திராவிடர் & பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கூட்டுஸ்தாபனம்” (National Scheduled Castes and Scheduled Tribes Finance and Development Corporation – NSFDC), மற்றும் “மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (State Scheduled Castes and Scheduled Tribes Finance and Development Corporation – SCDC)” ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் SLBC கூட்டத்தில் கலந்து கொள்ள முன்நின்று நடத்தும் வங்கி அழைப்பு விடுக்கலாம்.

5.3 வங்கிகளின் தலைமை அலுவலகம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட கடனுதவிகளின் விபரங்களின் அறிக்கைகள் மற்றும் தரவுகளின் விவரங்களை மற்ற கிளைகளிடமிருந்து பெற்று அவ்வப்போது மதிப்பீடு செய்திடல் வேண்டும்.

5.4 கடன் பெறும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மேலும் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வங்கி காலாண்டு அடிப்படையில், மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனுடன் தலைமை / கட்டுப்பாட்டு அலுவலக மூத்த அதிகாரிகளின் கள ஆய்வு அடிப்படையில் இந்த சமுதாயத்திற்கு நேரடியாகவோ அல்லது மாநில அளவிலான தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான நிறுவனங்களின் மூலமாகவோ பல்வேறு நோக்கங்களுக்காக கடன் வழங்குவதில் நிகழ்ந்துள்ள முன்னேற்றத்தையும் பரிசீலிக்கவேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கடனுதவியில் எந்தவொரு பெரிய இடைவெளியோ அல்லது மாற்றமோ இருப்பின் அது வங்கியின் நிர்வாக மன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டு, "நிதியியல் சேர்க்கை" என்ற கருப்பொருளின் கீழ் மே 14, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை DBR No.BC.93/29.67.001/2014-15-ன்படி மறுஆய்வு செய்யப்படவேண்டும்.

5.5 அறிக்கை அளித்தல்

முன்னுரிமைப் பிரிவுக் கடன் வழங்கல் குறித்த ஜூலை 07, 2016 தேதியிட்ட முதன்மைச் சுற்றறிக்கை எண் FIDD.CO.Plan 1/04.09.01/2016-17 மற்றும் டிசம்பர் 22, 2016 அன்று புதுப்பிக்கப்பட்டதன்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட கடன் உதவி குறித்த தகவல்கள் பற்றிய அறிக்கை அளிக்கப்படவேண்டும். வங்கிகள் இதை உரிய காலத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
முதன்மைச் சுற்றறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றறிக்கைப் பட்டியல்

வ. எண் சுற்றறிக்கை எண் தேதி பொருள்
1. DBOD. No. BP. BC. 172/C. 464(R)-78 12.12.78 வேலை வாய்ப்பு களை ஊக்குவிப்பதில் வங்கிகளின் பங்கு
2. DBOD. No. BP. BC. 8/C. 453(K)-78 09.01.79 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாய கடன்
3. DBOD. No. BP. BC. 45/C. 469(86)-81 14.04.81 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
4. DBOD. No. BP. BC. 132/C. 594-81 22.10.81 பழங்குடியினரின் வளர்ச்சியில் செயற்குழுவின் பரிந்துரைகள்
5. RPCD. No. PS. BC. 2/C. 594-82 10.09.82 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
6. RPCD. No. PS. BC. 9/C. 594-82 05.11.82 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு வங்கி அளிக்கும் நிதிச் சலுகைகள்
7. RPCD. No. PS. BC. 4/C. 594-83 22.08.83 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
8. RPCD. No. PS. 1777/C. 594-83 21.11.83 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
9. RPCD. No. PS. 1814/C. 594-83 23.11.83 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
10. RPCD. No. PS. BC. 20/C. 568(A)-84 24.01.84 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள் – கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல்
11. RPCD. No. CONFS/274/PB-1-84/85 15.04.85 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குதலில் தனியார் துறை வங்கிகள் பங்கு
12. RPCD. No. CONFS/62/PB-1-85/86 24.07.85 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குதலில் தனியார் துறை வங்கிகள் பங்கு
13. RPCD. No. SP. BC. 22/C. 453(U)-85 09.10.85 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள் – சலுகை வட்டி விகிதத் திட்டம்
14. RPCD. No. SP. 376/C. 594-87/88 31.07.87 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள் -
15. RPCD. No. SP. BC. 129/C. 594 (Spl.)/88-89 28.06.89 தேசிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம்
16. RPCD. No. SP. BC.50/C. 594-89/90 25.10.89 ஆதி திராவிடர் வளர்ச்சிக் கழகம் – யூனிட் செலவு பற்றி அறிவுறுத்தல்கள்
17. RPCD. No. SP. BC.107/C. 594-89/90 16.05.90 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
18. RPCD. No. SP. 1005/C. 594-/90-91 04.12.90 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள் - மதிப்பீட்டு ஆய்வு
19. RPCD. No. SP. BC. 93/C. 594 MMS-90/91 13.03.91 ஆதி திராவிடர் வளர்ச்சிக் கழகம் – யூனிட் செலவு பற்றி அறிவுறுத்தல்கள்
20. RPCD. No. SP. BC. 122/C. 453(U)-90-91 14.05.91 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டு வசதிக் கடன்கள் – டிஆர்ஐ திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது
21. RPCD. No. SP. BC. 118/C. 453(U)-92-93 27.05.93 முன்னுரிமை பிரிவு கடன்கள் - வீட்டு வசதிக் கடன்
22. RPCD. No. LBS. BC. 86/02.01.01/96-97 16.12.96 மாநில அளவிலான வங்கிக் குழுக்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையம் (SLBCs) சேர்க்கப்படுதல்
23. RPCD. No. SP. BC. 124/09.09.01/96-97 15.04.97 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளின் நலன் குறித்த பாராளுமன்றக் குழு - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து வங்கிகள் வைப்புகளை வலியுறுத்துதல்
24. RPCD. No. SAA. BC. 67/08.01.00/98-99 11.02.99 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள்
25. RPCD. No. SP. BC. 51/09.09.01/2002-03 04.12.02 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சியில் நிதி நிறுவனங்களின் பங்கு குறித்த பட்டறையின் நடவடிக்கைகள்
26. RPCD. No. SP. BC. 84/09.09.01/2002-03 09.04.03 முதன்மைச் சுற்றறிக்கையில் திருத்தம்
27. RPCD. No. SP. BC. 100/09.09.01/2002-03 04.06.03 அறிவிக்கை அமைப்பில் மாற்றங்கள்
28. RPCD. No. SP. BC. 102/09.09.01/2002-03 23.06.03 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் – கடன் வழங்கல் குறித்த சீராய்வின் மாதிரி பயிற்சி – முக்கிய கருத்துரைகள்
29. RPCD. SP. BC. No. 49/09.09.01/2007-08 19.02.08 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வசதிகள் – திருத்தப்பட்ட இணைப்பு
30. RPCD. GSSD. BC. No. 81/09.01.03/2012-13 27.06.13 SGSY மறுசீரமைப்பு - தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM)
31. RPCD.CO.GSSD.BC.No.26/09.16.03/2014-15 14.08.14 ஸ்வர்ணா ஜெயந்தி சஹகாரி ரோஸ்கார் யோஜனா (SJSRY) திட்டத்தின் மறுசீரமைப்பு - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (NRLM)

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?